மகளை பார்க்க நீதிமன்றத்தில் அனுமதி கேட்ட பாலாஜி.! அதிரடி தீர்ப்பு.! பாவம்யா இந்த ஆளு.!

0
927
Balaji
- Advertisement -

சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்தவர் நடிகர் தாடி பாலாஜி. சினிமாவில் வாய்ப்பு குறையவே தொலைக்காட்சி பக்கம் திரும்பிவிட்டார். மேலும், கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.  

-விளம்பரம்-
poshika

இந்த நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் நிகழ்ச்சி முடிவதற்குள் ஒன்றிணைத்து விடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாலாஜி வெளியேறியபோது நித்யா, பாலாஜிக்கு 100 நாள் பரீட்சை ஒன்றை வைத்தார்.

- Advertisement -

தற்போது அந்த நூறு நாட்கள் முடிந்து பல நாட்கள் ஆன நிலையிலும் இவர்கள் ஒன்றாக இணையவில்லை . இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு பாலாஜி மீது அவரது மனைவி மீண்டும் மாதவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் மது அருந்துவிட்டு பாலாஜி தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும், வீட்டிற்கு வந்து கண்ணாடியை உடைத்தாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார்.

இவர்கள் விவகாரம் இப்படி ஒரு புறம் போய்க்கொண்டிருக்க இவர்களது வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனது மகள் கோசிகாவை பார்க்க பாலாஜி அனுமதி கேட்டார். பாலாஜியின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி வாரம் ஒரு முறை பாலாஜியின் தாய் வீட்டில் மாலை 3:00 முதல் 4:00 மணி வரை தனது மகளை பார்க்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement