பிக் பாஸ் வீட்டிலிருந்த வெளியேறிய முதல் போட்டியாளர்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

0
1255
bigg-boss

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அடுத்த வாரம் நடைபெறும் இறுதி போட்டிக்கு தகுதி பெரும் நபர் யார் என்பதை மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். ஜனனி நேரடியாக இறுதி போட்டிக்கும் தகுதிபெற்ற நிலையில் மீதமுள்ள ரித்விகா, ஐஸ்வர்யா, பாலாஜி, யாஷிகா, விஜயலக்ஷ்மி ஆகியோரில் யார் வெளியேற போகிறார்கள் என்ற அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

balaji big boss

- Advertisement -

இந்த வாரம் இரண்டு நபர்கள் வெளியேற்றபடுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த வாரமும் ஐஸ்வர்யா காப்பற்றபட்டுவிட்டார் என்று ஏற்கனவே நாங்கள் தெரிவித்திருந்தோம். இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் நிகழ்ச்சியின் முதல் பாதியில் இருந்து பாலாஜி எலிமினேட் செய்யப்பட்டுளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

தற்போது நிகழ்ச்சியை நேரில் பார்த்துக்கொண்டிருப்பவர்களிடம் இருந்து வந்த தகவலின்படி பாலாஜி வெளியேற்றபட்டுள்ளதாக நம்பகரதனமான தகவல் கிடைத்துள்ளது. அதே போல இரண்டாவதாக வெளியேற போகும் மற்றொரு நபர் யார் என்பது இன்னும் சற்று நேரத்தில் கமல் அறிவிக்க இருக்கிறார் என்று தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

-விளம்பரம்-

Yashika-bigg-bosss

Bigg-Boss-Vijayalakshmi

அந்த வகையில் யாசிகா அல்லது விஜ்யலக்ஷ்மி ஆகிய இருவரில் யாரேனும் வெளியேற்றபடலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த வாரம் நடந்த வாக்களிப்பில் யாஷிகாவிற்கும், விஜிக்கும் தான் அதிக போட்டி நிலவி வந்தது, தற்போது பாலாஜி வெளியேறிவிட்ட நிலையில் அடுத்து வெளியேற போகும் நபர் யார் என்ற தகவல் கிடைத்ததும் நமது வலைத்தளத்தில் தெரிவிக்கிறோம்.

Advertisement