பாலா மாதிரி ரூடான பசங்கள புடிக்கும்னு ஏதாவது பொண்ணு வந்தா சப்புன்னு அரஞ்சிடுவேன் – கடுப்பான மாஸ்டர் பட நடிகை. வீடியோ இதோ.

0
3433
bala

பிக் பாஸ் வீட்டில் தற்போது அர்ச்சனாவிற்கும் பாலாஜிக்கும் இடையிலான பிரச்சனை தான் மிகவும் கொழுந்துவிட்டு எரிகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்னர் அர்ச்சனா, பாலாஜியை குழந்தை என்று குறிப்பிட்டபோது கடுப்பான பாலாஜி நீங்கள் என்னை குழந்தை என்று கூப்பிட வேண்டாம் என்று கூறியிருந்தார். அதேபோல இனிமேல் தன்னை யாரும் வாடா போடா என்று அழைக்க வேண்டாம் என்றும் அனைவர் முன்பும் பேசி இருந்தார் பாலாஜி.நேற்றைய நிகழ்ச்சியில் கிளீனிங் டீமில் இருந்த பாலாஜி தூங்கிக் கொண்டிருந்த போது அவரை வீட்டை பெருக்க மீனிங் டீமில் இருந்த வேல்முருகன் அஜித் ஆகியோர் எழுப்பினார்கள் அப்போது பாலாஜி தூக்கத்தில் எழுப்பி வேலை செய்ய செல்வது சரியான விஷயம் இல்லை என்று கூறியிருந்தார். அர்ச்சனா, பாலாஜியை அழைத்து வரவில்லையா என்று கேட்க பின்னர் தூக்கத்திலிருந்து எழுந்து வந்து பாலாஜி வேலை செய்தார். இதனால் அர்ச்சனாவிற்கு பாலாஜிக்கும் கொஞ்சம் வாக்குவாதம் ஏற்பட்டது.

This image has an empty alt attribute; its file name is soundarya-nandhakumar.jpg

இப்படி ஒரு நிலையில் பாலாஜி குறித்து வறுத்தெடுத்து உள்ளார் விஜய் டிவி சீரியல் நடிகையும் மாஸ்டர் பட நடிகையுமான சௌந்தர்யா. விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி மூலம் சௌந்தர்யா பிரபலமானவர். மேலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான ‘பகல் நிலவு’ தொடரிலும் நடித்துள்ளார். மேலும், அதோடு சௌந்தர்யா மாஸ்டர் படத்தில் கூட நடித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 3 இன் டைட்டில் வின்னர் முகேன் ராவ் பாடிய ‘சத்தியமா நான் சொல்லுரேண்டி’ என்ற பாடலை பாடி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் விக்னேஷ் கார்த்திக் இயக்கிய ‘Yours Shamefully’ என்ற குறும்படத்தின் மூலம் மக்களிடையே பரவலாக பேசப்பட்டார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சௌந்தர்யாவிடம் பட்டிமன்ற டாஸ்கின் போது அர்ச்சனாவிற்கு பாலாஜிக்கும் இடையே நடந்த பிரச்சனை குறித்து கேட்கப்பட்டது அப்போது பேசிய அவர், பட்டிமன்றத்தில் பொதுவாக ஒருவரின் பெயரை உதாரணமாக எடுத்து தான் சொல்வார்கள். அதை ஏன் அவர் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டார் என்று தெரியவில்லை. இப்போதும் நீங்கள் சாதாரணமாக பேச மாட்டீர்களா ? எப்போதும் உங்களுக்கு கொம்பு முளைத்தது போன்றுதான் இருப்பீர்களா என்ன ? பாசம் என்றாலும் அவர் மட்டம் தட்டுகிறார், கோபம் என்றாலும் அவர் மட்டும் தட்டுகிறார், அந்த பையன் கஷ்டப்பட்டு வந்தான் என்று நாம் யோசித்தாகே கூட இப்படிப்பட்ட கஷ்டங்களை தாண்டி வந்த பையன் எப்போது இப்படி வெறுப்பு காண்பித்துக் கொண்டே இருக்க மாட்டான்

வீடியோவில் 6 : 11 நிமிடத்தில் பார்க்கவும்

அவர் முரட்டுத்தனமாக தான் இருக்கிறார். நீ போலியாக இல்லை என்பதற்காக முரட்டுத்தனமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இப்போ இருக்க பசங்க இந்த காலத்தில் வயசுக்கு மரியாதை தர மாட்டேன் என்று சொல்வார்கள். பரவாயில்லை, ஆனால் அர்ச்சனாவின் அனுபவம்தான் உன்னுடைய வயது அதற்கு கூட மரியாதை கிடையாது. சில பெண்களுக்கு எல்லாம் முரட்டுத்தனமாக இருக்கும் பசங்களை பிடிக்கும். எனக்கு அந்த பெண்களை பார்த்தால்சப்புன்னு அறைந்து விடலாம் என்பது போலத்தான் இருக்கும். வரிஞ்சு வரிஞ்சு லவ் செய்வார்கள் அந்த பசங்களை எல்லாம் மதிக்க மாட்டார்கலுங்க ஆனால் ஏய் போடி என்று சொல்லும் பசங்களை விழுந்து விழுந்து காதலிப்பாள்லுங்க அது மாதிரி தான் இங்கேயும் நடக்கப்போகிறது. அந்த பையனை பிடிக்குது என்று சொல்லி என்னிடம் ஏதாவது ஒரு பொண்ணு வரட்டும் அப்புறம் இருக்குது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement