வாரத்தின் சிறந்த போட்டியாளரை தேர்ந்தெடுப்பதில் பாலாவின் இரட்டை வேஷம் – இந்த குறும்படத்தை பாருங்க புரியும்.

0
2016
bala
- Advertisement -

பிக்பாஸ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 10 வாரங்களை கடந்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி ஆகிய 6 பேர் வெளியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று அறிவித்து போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்தார் கமல். கடந்த வாரம் நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ் வெளியேறி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கோழிப்பண்ணை டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர் ஒவ்வொருக்கும் தங்க முட்டை ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. இதனை நரிகள் ஆக இருக்கும் போட்டியாளர்களிடமிருந்து தங்களது முட்டைகளை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

-விளம்பரம்-

இந்த டாஸ்க் நேற்றோடு முடிவடைந்து இருந்தது. இந்த டாஸ்க் ஆரம்பம் ஆன முதலே போட்டியாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டு தான் வந்தது. இந்த டாஸ்கின் முடிவில் பாலாஜியிடம் தான் அதிக மதிப்பெண் இருந்தது. இதனால் இந்த டாஸ்கில் வெற்றி பெட்ரா பாலாஜிக்கு பிக் பாஸ் ஒரு புதிய பவர் ஒன்றையும் கொடுத்துள்ளார். அதை என்ன என்பதை பின்னர் அறிவிக்கப் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த டாஸ்க் முடிந்த நிலையில் இந்த வாரம் பெஸ்ட் மற்றும் வொர்ஸ்ட் பர்பாமர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

- Advertisement -

இதில் இந்த வாரம் டாஸ்க் உட்பட சுவாரசியம் குறைவாக இருந்த இரண்டு நபரை மற்றப் போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்தனர். அப்போது பாலாஜி, அனிதாவை தேர்ந்தெடுத்தார். அதே போல இந்த வாரம் முழுதும் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளராக இந்த வாரம் கேப்டனாக இருந்த ரம்யாவை தேர்ந்தெடுத்தார். அதற்கு அவர் சொன்ன இந்த வாரம் டாஸ்க் உட்பட அனைத்து வேலைகளையும் செய்தார் என்று கூறி இருந்தார் பாலா.

ஆனால், கடந்த வாரம் டாஸ்க் உட்பட அனைத்து வேலைகளையும் சுவாரசியமாக செயல்பட்ட போட்டியாளர் யார் என்பதை தேர்ந்தெடுத்த போது பாலா சொன்னது. கடந்த வாரம் அனிதா கேப்டன் ஆகி இருந்ததால் அவரது பெயரை சிறப்பாக செயல்பட்ட போட்டியளராக சிபாரிசு செய்ய முடியவில்லை என்று சொன்ன பாலா, இந்த வாரம் ரம்யா கேப்டனாக இருக்கும் போது எப்படி அவரை சிறந்த போட்டியாளராக தேர்ந்தெடுத்தார் என்று நெட்டிசன்கள் ஒரு குறும்படத்தை போட்டுள்ளார்கள்.

-விளம்பரம்-
Advertisement