வாரிசு நடிகர்கள் குறித்து விமர்சித்து பதிவை போட்டு பின்னர் டெலிட் செய்த பாலாஜி முருகதாஸ் – வைரலாகும் Screenshot

0
320
Balaji
- Advertisement -

நேபோடிசன் குறித்து பிக் பாஸ் பாலாஜி போட்டு இருக்கும் ட்வீட் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளது. தமிழில் ஐந்து வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இருக்கிறது. சமீபத்தில் தான் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கோலாகலமாக முடிவடைந்தது. இதில் முதல் பரிசை அஸீமும் இரண்டாம் பரிசை விக்ரமனும் வென்றனர்.

-விளம்பரம்-
balajimurugadoss

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் முகம் தெரியாத நபர்கள் கூட மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள். அந்த வகையில் பிக் பாஸ் 4 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவு பிரபலம் கிடைத்திருக்கிறது.

- Advertisement -

பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ்:

ஆனால், நிகழ்ச்சிக்கு பிறகு இவர் எந்த ஒரு பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இதனால் இவர் சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருந்தார். இந்த நிகழ்ச்சி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி இருந்தது. முதல் சீசன் முதல் ஐந்து சீசன்களில் பங்கு பெற்ற போட்டியாளர்கள் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்கள். வித்தியாசமான முறையில் இந்த நிகழ்ச்சி நடந்து இருந்தது.

அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்த பாலாஜிக்கு பிக் பாஸ் சீசன் 4 பாலாஜிக்கும் ஏற்பட்ட வித்யாசங்கள் இருந்தது. அதிலும் சனம் ஷெட்டி மற்றும் ஆரி விஷயத்தில் பல முறை பாலாஜி தரம் தாழ்ந்து நடந்துகொண்டார். அதிலும் ஒரு எபிசோடில் சனம் ஷெட்டி அடஜஸ்ட்மென்ட் செய்து தான் அழகி பட்டத்தை வென்றார் என்று பாலாஜி குறிப்பிட்டதாக பெரும் சர்ச்சையே வெடித்தது. இதனால் அல்டிமேட் நிகழ்ச்சியில் கொஞ்சம் அடக்கியே வாசித்தார் பாலாஜி.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் பாலாஜி முருகதாஸ் நேபோட்டிசம் குறித்து பதிவிட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது. அதில் ‘கவின்,பிரதீப் மாதிரி மற்றவர்களுக்கு முன் உத்தரமான இருக்கும் நபர்களுக்கு வழிவிடுங்கள். தொலைக்காட்சி முதல் சினிமா வரை இனி நேபோடிச நபர்கள் அதிகம் உழைக்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.ஆனால், இந்த பதிவை பாலாஜி நீக்கிவிட்டார். இதனை பகிர்ந்து இருக்கும் ஜோ மைக்கேல் ‘மீராமிதுன் மாதிரி நேபோட்டிசம் வளர விடலனு அழுகறது’ என்று கேலி செய்து உள்ளார்.

meera

ஏற்கனவே பிக் பாஸ் போட்டியாளரான மீரா மிதுன் தமிழ் சினிமாவில் இருக்கும் வாரிசு அரசியல்களால் தான் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது என்று கூறியிருந்தார். அதிலும் குறிப்பாக விஜய் மற்றும் சூர்யா குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வந்தார். இதனை தொடர்ந்து அவதூறாக பேசியதால் மீரா மிதுன் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்து பின்னர் ஜாமினில் வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீரா மிதுன் போல பாலாஜி முருகதாஸ் வாரிசு அரசியல் குறித்து பதிவிட்டு இருக்கும் இந்த பதிவு சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

Advertisement