கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் விட்டுக் கொடுத்த பாலா – இந்த வார கேப்டன் இவர் தான்.

0
873
bala
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 66 நாட்களை கடந்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகிய 5 பேர் வெறியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் சனம் ஷெட்டி வெளியேறி இருந்தார். இன்னும் 12 பேர் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. இந்த வாரத்திற்கான நாமினேஷன் கடந்த வாரமே நடைபெற்று முடித்துவிட்டு கடந்த வாரம் கால்சென்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது அந்த டாஸ்கில் தோல்வி பெற்ற போட்டியாளர்கள் அடிப்படையில் பாலாஜி அனிதா, ஆரி, அர்ச்சனா, ரம்யா பாண்டியன், ஷிவானி, நிஷா ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தார்கள்.

-விளம்பரம்-

ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்க்கில் டாப் 3 இடத்தை பிடித்த ஆரி பாலாஜி அர்ச்சனா ஆகிய மூவருமே இந்த வார நாமினேஷனில் இடம் பெற்று இருந்தார்கள். இந்த மூவருக்கும் பதிலாக பாலாஜி கேப்ரில்லாவை நாமினேட் செய்தார் ஆரி ஜித்தன் ரமேஷையும், அர்ச்சனா, சோம் சேகரையும் நாமினேட் செய்தார். இதன் அடிப்படையில் இந்த வாரம் ரம்யா பாண்டியன், நிஷா, ஷிவானி, சோம் சேகர், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் நாமினேட் ஆகியிருக்கிறார்கள்.

இதையும் பாருங்க : என்ன இப்படி ஸ்லிம் ஆகிட்டீங்க – மஹாலக்ஷ்மியின் லேட்டஸ்ட் லுக்கை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

- Advertisement -

இந்த வாரம் ‘புதிய மனிதா’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் போட்டியாளர்கள் ரோபோக்கள் மற்றும் மனிதர்கள் என இரண்டு அணிகளாக பிரிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் ரோபோக்கள் தலைவராக அர்ச்சனா இருக்க, மனிதர்களின் தலைவராக பாலாஜி இருப்பார் என்றும் மனிதர்கள் டீம், இயந்திரங்களாக மாறியவர்களிடம் இருந்து மகிழ்ச்சி, கோபம், துக்கம் போன்ற எதாவது இரண்டு உணர்வுகளை கொண்டு வர எல்லா விதமான முயற்சிகளையும் செய்ய வேண்டும் என பிக்பாஸ் அறிவித்து இருந்தார்.

நேற்றோடு இந்த டாஸ்க் முடிந்த நிலையில், அடுத்த வார தலைவர் பதவிக்கு பாலா, நிஷா, ரம்யா ஆகிய மூன்று பேருக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கின் இறுதியில் பாலா தலைவராக தேர்ந்துடுக்கப்பட்டார். ஆனால், பாலா இந்த டாஸ்கில் செய்த தவறை யாரும் கவனிக்கவில்லை என்று நேர்மையாக தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு உள்ளார். இதனால் அடுத்த வார தலைவராக பாலாவிற்கு பின்னர் குறைவான நேரத்தில் இந்த டாஸ்க்கை முடித்த ரம்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement