சிறு வயதில் தனது தாய் தந்தையுடன் பாலாஜி முருகதாஸ் – இவரையா பாலாஜி, குடிகார தந்தைனு சொன்னாரு. பாத்தா அப்படி தெரியலயா.

0
3406
balaji
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனின் பல பரிட்சியமான போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் சோம் சேகர், பாலாஜி முருகதாஸ் என்று ரசிகர்களுக்கு பரிட்சமில்லாத சில போட்டியாளர்களும் கலந்து கொண்டு உள்ளனர். இதில் மாடல் அழகனான பாலாஜி தேனியில் பிறந்த இவர் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான் மாடலிங் மீதிருந்த ஆர்வத்தால், இவர் மிஸ்டர் இந்தியா போட்டியில் கூட கலந்து கொண்டிருக்கிறார். 2018 ஆம் ஆண்டு இவர் மிஸ்டர் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு பட்டத்தை வென்றார்.அதே போல இவர் 2017 ஆம் ஆண்டின் பிரபல டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் Mr. Perfect Body என்ற பட்டத்தை கூட வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

மேலும் பாலாஜி ஒருவர் கடந்த ஆண்டு மீனா நடிப்பில் வெளியான மெர்லின் காமாக்ஷி என்ற வெப்சீரிஸ் என்கூட நடித்திருக்கிறார். அதுபோக இவர் ஏற்கனவே ஆர்கே சுரேஷ் நடிப்பில் வெளியாக இருந்த டைசன் என்ற படத்தில் கமிட் ஆனதாக செய்திகள் வெளியானது . அந்த படத்தின் அறிவிப்பு கடந்த 2018 ஆண்டில் வெளியானது. இப்படி ஒரு நிலையில் தான் இவர் பிக் பாஸில் கலந்து கொண்டு இருக்கிறார். இவர் அனைவரிடமும் முகத்து நேராக பேசுகிறார் என்று பலர் இவரை விரும்பினாலும், சிலர் இவரது முரட்டு குணத்தை விரும்பவில்லை.

- Advertisement -

பிக் பாஸ் ஆரம்பித்த சில நாட்களில் கடந்து வந்த டாஸ்க் என்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கின் போது பாலாஜி முருகதாஸ் பேசும் போது, தனது தாய், தந்தை இருவரும் குடிக்கு அடிமையானவர்கள் என்றும், குடித்துவிட்டு அப்பா தன்னை நள்ளிரவில் அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் ஒரு குழந்தையைப் பெற்று சரியாக வளர்க்க முடியாதவர்கள் ஏன் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். பாலாஜி முருகதாஸ்ஸின் இந்த கதையை கேட்டு போட்டியாளர்களும் பார்வையாளர்களும் கண் கலங்கினர்.

மேலும், பாலாஜி முருகதாஸை Self Made Man என்று அனைவருமே சமூக வலைதளத்தில் புகழ்ந்து தள்ளினர். அதே போல கடந்த ஆக்டோபர் 29 ஆம் தேதி நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் பாலாஜி தனது அம்மா மிகவும் அப்பாவி என்று கூறி இருந்தார்.இப்படி ஒரு நிலையில் பாலாஜி முருகதாஸ் சிறு வயதில் தனது அப்பா அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement