பாலாஜி பண்ணது புடிச்சிருக்கு – பிரபல நடிகை போட்ட ட்வீட்டை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
16977
bala
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமானநிறைவு செய்ய இருக்கிறது. இந்த நான்கு வாரத்தில் அன்பு, சண்டை, கொஞ்சம் ரொமான்ஸ், புது புது உறவுகள் பல பஞ்சாயத்துக்கள் அரங்கேறி இருந்தது. நாளுக்கு நாள் பிக் பாஸின் சுவாரசியம் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. அதவும் இந்த வாரம் பாலாஜி, ஆரி, அர்ச்சனா என்று பலரின் பஞ்சாயத்துக்கள் நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்டியது. இப்படி ஒரு நிலையில் பாலாஜி நேற்று செய்த மோசமான செயலுக்கு பிரபல நடிகை ஆதரவு தெரிவித்து உள்ளார்.

-விளம்பரம்-

இந்த சீசனில் பாலாஜிதான் யாருக்கும் அடங்காத ஒரு பிள்ளையாக இருந்து வருகிறார். எந்த ஒரு பிரச்சனை என்றாலும் புறம் பேசாமல் சம்பந்தப்பட்டவரிடமே நேருக்கு நேராக பாலாஜி பேசி வருவதால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு குவிந்தது. இருப்பினும் பாலாஜியின் கோபமும் கொஞ்சம் முரட்டுத்தனமான சுபாவத்தையும் குறைத்துக்கொள்ளவேண்டும் என்று பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் எப்போது இவர் அர்ச்சனா குரூப்பில் சேர்ந்தவரோ அப்போதிலிருந்து இவரது பெயர் கொஞ்சம் கொஞ்சமாக டேமேஜ் அடங்க துவங்கி வருகிறது.

- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை பெருக்கும் பிரச்சனையில் இவருக்கும் அர்ச்சனாவிற்கும் ஒரு மிகப்பெரிய சண்டை வெடித்தது. ஆனால், அடுத்த நாளே பாலாஜி தனக்கு மகன் போன்றவர் என்று அம்மா சென்டிமென்ட்டை தாக்கி பாலாஜியை தனது வசப்படுத்தினார் அர்ச்சனா. நேற்றைய நிகழ்ச்சியில் கூட ஆரி, அர்ச்சனாவுக்கு எதிராக பேசிய போது பாலாஜி அர்ச்சனாவுக்கு ஆதரவாக பேசி இருந்தார். அதேபோல நேற்றைய நிகழ்ச்சியில் இந்த வார தலைவர் போட்டிக்கான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது.

அதில் பாலாஜி, சம்யுக்தா, சோம் சேகர் ஆகியோர் விளையாடி இருந்தார்கள். இந்த டாஸ்கில் யார் அதிக பந்தை கூடைக்குள் போடுகிறார்களோ அவர்கள்தான் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆரம்பம் முதலே கூடையில் பந்தை போட திணறிய பாலாஜி, தான் பொறுக்கிய பந்துகளை சம்யுக்தா கூடையில் போட்டு அவரை இந்த வார தலைவர் உதவி செய்திருந்தார்.

-விளம்பரம்-

மற்ற போட்டியாளர்கள் எவ்வளவு சொல்லியும் பாலாஜி, நான் யாரை தலைவராக பார்க்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்று கூறியிருந்தார். அதேபோல சம்யுக்தா மற்றவர்களின் பேச்சை கேட்டு நடப்பவர் கிடையாது என்றும் கூறியிருந்தார் பாலாஜி. இப்படி ஒரு நிலையில் பாலாஜியின் இந்த கருத்திற்கு ஆதரவாக பிரபல நடிகையான ஸ்ரீப்ரியா ட்வீட் செய்திருக்கிறார். இதுகுறித்து பதிவிட்டுள்ள மற்றவர்களின் பேச்சை கேட்டு நடக்காத பெண்தான் கேப்டனாக இருக்க வேண்டும் என்று கூறிய கருத்து என்னை மிகவும் கவர்ந்தது என்று கூறியிருந்தார்.

ஸ்ரீபிரியாவின் இந்த கருத்தை கேட்ட நெட்டிசன்கள், ஏன்மா சொம்பு சம்யுக்தா விட பயங்கரமான சொம்பா இருக்கீங்க ஒரு அளவு இல்லையா என்றும். பாலா தான் தோற்று விடுவோம் என்று தெரிந்துதான் சம்யுக்தாவிற்கு உதவியதாக கூறி வருகிறார்கள். அதேபோல பாலா தன்னுடைய நண்பர்களையும் எதிரிகளையும் மிகவும் அருகில் வைத்துக்கொண்டு நாமினேஷனில் இருந்து தப்பித்து வருவதாகவும் கூறி வருகிறார்கள்.

Advertisement