விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக தான் இருந்தார்.இருப்பினும் இவருக்கு இந்த சீசனில் இரண்டாம் இடம் கிடைத்தது. அதே போல இந்த சீசன் சுவாரசியமாக சென்றதற்கு பாலாஜியும் ஒரு முக்கிய காரணம் என்று தான் சொல்ல வேண்டும். இவர்கள் இருவருமே பிக் பாஸ் வீட்டில் எலியும் பூனையுமாக தான் இருந்து வந்தார்கள்
நடிகர் ஆரி அவர்கள் சினிமா தவிர சென்னை வெள்ளம்,ஜல்லிக்கட்டு பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை போன்ற அனைத்து சமுதாய பிரச்சனைக்கும் முன்னின்று குரல் கொடுத்தவர்.அதுமட்டும் இல்லாமல் இவர் கடந்த சில ஆண்டுகளாக மாறுவோம் மாற்றுவோம் என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவி வருகிறார். அந்த அறக்கட்டளையில் விவசாயம் குறித்த விழிப்புணர்வுகளை மேற் கொண்டு வருகிறார் ஆரி. இதற்காக நடிகர் ஆரி அவர்கள் கின்னஸ் புத்தகத்தில் கூட இடம் பிடித்தார்.
https://www.youtube.com/watch?v=hdf_RDcd9Sk&feature=emb_title
ஆரியின் சமூக செயல்பாடுகள் குறித்து கமல் கூட பல முறை கூறியிருந்தார். அதே போல இறுதி போட்டியின் போது ஆரியை தனது சகோதரனாக ஏற்றுக்கொண்ட பாலாஜி. வெளியில் வந்ததும் விவசாயம் செய்வேன் என்று கூறி இருந்தார். ஆரியை போன்று பாலாஜியும் ஜல்லிக்கட்டுவிற்காக போராடி இருக்கிறார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பாலாஜி.





