அது பாலாஜியாக இருந்தாலும் எந்த முரடனாக இருந்தாலும் சரி – லட்சுமி ராமகிருஷ்ணனின் ஆவேச பதிவு.

0
45386
lakshmi
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் இருந்து பாலாஜி, ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றபட்டதாக தகவல்கள் தான் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த திங்கள் கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் யாரிடம் பிரச்சனை இருக்கிறதோ அதனை புகாராக எழுத வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்து இருந்தார். மேலும், அப்படி குற்றம் சாட்டப்படும் போட்டியாளர்கள் இருவரையும் கூண்டுக்குள் நிற்கவைத்து நீதிபதியாக சுசித்ரா பஞ்சாயத்து செய்து வைத்திருக்கிறார். பாலாஜி மற்றும் சனம் ஆகி இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டி புகார்களை எழுதினர். ஆனால், அந்த ப்ரோமோவை நீக்கி இருந்தது விஜய் டிவி.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமே சனம் ஷெட்டி எழுதிய புகாரில் பாலாஜி குறித்து எதோ சர்ச்சையான விஷயத்தை எழுதி இருப்பதால் தான் என்று கூறப்படுகிறது. சனம் ஷெட்டி எழுதிய கடிதத்தில் பாலாஜி,நான் டைட்டில் வின்னராக இருக்கும் பியூட்டி பேஜன்டுக்கு எதிராக அட்ஜஸ்ட்டமென்ட் மற்றும் காம்ப்ரமைஸ் என்ற வார்த்தையை பயன்டுத்தியதாகவும். யாரோ ஒரு மூன்றாம் நபர் சொன்ன ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்னுடைய நேர்மைக்கு களங்கம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயம் வெளியானால் கண்டிப்பாக சமந்தபட்ட அந்த பியூட்டி பேஜன்ட் நிறுவனமும் அதில் பங்குபெற்ற அணைத்து பெண் போட்டியாளர்களும் பாலாஜிக்கு எதிராக குற்றம் சாட்ட வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

எனவே, இதனை பெரிதாக்க விரும்பாமல் ப்ரோமோவையே நீக்கியது விஜய் டிவி. அதேபோல நேற்றைய நிகழ்ச்சியில் சனம் பாலாஜிக்கு எதிராக புகார் எழுதிக் கொண்டிருக்கும்போது கூடுதலாக 2 பேப்பரை வாங்கி புகார் எழுதி இருந்தார். அந்த அளவிற்கு பாலாஜி மீது புகார்கள் குவிந்தன. இதனிடையே இந்த டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் பாலாஜி விஷயத்தில் கண்டிப்பாக விஜய் டிவி தலையிட்டு விசாரிக்க வேண்டும் என்று பல கண்டங்கள் எழுந்து வருகிறது.

சமீபத்தில் கூட முன்னாள் போட்டியாளரான வனிதா, பாலாஜியை கண்ட மேனிக்கு திட்டி இருந்தார். மேலும், #EvictBalaji என்ற ஹேஷ் டெக் போட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன், பாலாஜியை கண்டித்து ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில், பெண்களின் வெற்றியை ‘சமரசத்திற்கு’ காரணம் கூறுவது ஏற்கத்தக்கதல்ல. பெண்கள் முதலில் அந்த வழியில் பேசுவதை நிறுத்த வேண்டும். அவ்வாறு பேசும் எவரும் சட்டப்பூர்வமாக தண்டிக்கப்பட வேண்டும். அது பாலாவாக இருந்தாலும் சரி எந்த முரடனாக இருந்தாலும் சரி என்று குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement