பணத்தை திருப்பி கேட்ட பெண்ணை போனில் பாலாஜி ஆபாசமாக பேசி இருக்கும் ஆடியோவை ஜோ மைக்கேல் வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளது. தமிழில் ஐந்து வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இருக்கிறது. சமீபத்தில் தான் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கோலாகலமாக முடிவடைந்தது. இதில் முதல் பரிசை அஸீமும் இரண்டாம் பரிசை விக்ரமனும் வென்றனர்.
This is What we can Expect from a #Abuser who won #Bb title!!
— Joe Michael Praveen (@RazzmatazzJoe) March 16, 2023
They are not the same they show in the Social Media !!
After the Victim asked Him the Refund he hided himself and She called Him Pussy (Cat) for that this Response!!
To Him Everything is Fake ! #Azeem Is far Better ! https://t.co/Jz5sGfkhlH pic.twitter.com/oHGtdhSCpO
மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் முகம் தெரியாத நபர்கள் கூட மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள். அந்த வகையில் பிக் பாஸ் 4 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவு பிரபலம் கிடைத்திருக்கிறது.
பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ்:
ஆனால், நிகழ்ச்சிக்கு பிறகு இவர் எந்த ஒரு பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இதனால் இவர் சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருந்தார். இந்த நிகழ்ச்சி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி இருந்தது. முதல் சீசன் முதல் ஐந்து சீசன்களில் பங்கு பெற்ற போட்டியாளர்கள் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்கள். வித்தியாசமான முறையில் இந்த நிகழ்ச்சி நடந்து இருந்தது.
NRI Victim has Texted me In what's App Since March 21 2022 for Legal Help !! Initially she asked me Suggestions without Saying the Name of Accused but Later This Year On 14 th feb She apporached me with all Proofs and The Names and she claimed she lost 15 laks odd !! pic.twitter.com/KWaPsrFEJC
— Joe Michael Praveen (@RazzmatazzJoe) March 15, 2023
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:
மேலும், 16 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் 12 பேர் வெளியேற்றப்பட்டு இறுதி வாரத்தில் பாலாஜி, நிரூப், தாமரை, ரம்யா ஆகிய 4 பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தனர். இப்படி ஒரு நிலையில் 35 லட்ச ரூபாய் பரிசுத் தொகையுடன் பிக் பாஸ் அல்டிமேட் பட்டத்தை வென்றார் பாலாஜி முருகதாஸ். இரண்டாம் இடத்தை நிரூப்பும், மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தை ரம்யா மற்றும் தாமரையும் பிடித்துள்ளனர்.
அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்த பாலாஜிக்கு பிக் பாஸ் சீசன் 4 பாலாஜிக்கும் ஏற்பட்ட வித்யாசங்கள் இருந்தது. அதிலும் சனம் ஷெட்டி மற்றும் ரி விஷயத்தில் பல முறை பாலாஜி தரம் தாழ்ந்து நடந்துகொண்டார். அதிலும் ஒரு எபிசோடில் சனம் ஷெட்டி அடஜஸ்ட்மென்ட் செய்து தான் அழகி பட்டத்தை வென்றார் என்று பாலாஜி குறிப்பிட்டதாக பெரும் சர்ச்சையே வெடித்தது. இதனால் அல்டிமேட் நிகழ்ச்சியில் கொஞ்சம் அடக்கியே வாசித்தார் பாலாஜி.
லீக் ஆடியோ :
இப்படி ஒரு நிலையில் பாலாஜி,, ஒரு பெண்ணிடம் ஆபாசமாக பேசும் ஆடியோ ஒன்றை ஜோ மைக்கேல் வெளியிட்டுள்ளார். ஜோ மைக்கேலுக்கை தொடர்பு கொண்டுள்ள அந்த பெண் ’15 லட்ச ரூபாய் பணத்தை பாலாஜி ஏமாற்றிவிட்டு, திருப்பி கேட்டால் ஆபாசமாக பேசுகிறார்’ என்று கூறியுள்ளார். இதுகுறித்த ஆதரங்களையும் ஜோ மைக்கேல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.