என்னது பாலாஜி முருகதாஸ் மிஸ்டர் இந்தியாவே கிடையாத. இது என்ன புது சர்ச்சை.

0
26781
balaji
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் இருந்து பாலாஜி, ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றபட்டதாக தகவல்கள் தான் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த திங்கள் கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் யாரிடம் பிரச்சனை இருக்கிறதோ அதனை புகாராக எழுத வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்து இருந்தார். மேலும், அப்படி குற்றம் சாட்டப்படும் போட்டியாளர்கள் இருவரையும் கூண்டுக்குள் நிற்கவைத்து நீதிபதியாக சுசித்ரா பஞ்சாயத்து செய்து வைத்திருக்கிறார். பாலாஜி மற்றும் சனம் ஆகி இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டி புகார்களை எழுதினர். ஆனால், அந்த ப்ரோமோவை நீக்கி இருந்தது விஜய் டிவி.

-விளம்பரம்-

கடந்த 10ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி மற்றும் பாலாஜி முருகதாஸ் பேசிக்கொண்டிருக்கையில் பாலாஜி முருகதாஸ் நான் ஒரு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சவுத் இந்தியா என்ற பெயரில் pageant ஒன்றை நடத்தினேன் என்று கூறினார் அதற்கு சனம் செட்டி எப்போது என்று கேட்டதற்கு பாலாஜி முருகதாஸ் இது உங்களுடையது மாதிரி டுபாக்கூர் கிடையாது என்று கூறினார். உங்களுடைய நிகழ்ச்சிகளில் எல்லாம் யாரும் இன்டர்நேஷனல் லெவலுக்கு செல்ல முடியாது என்று பாலாஜி முருகதாஸ் கூறினார். அதற்கு சனம் செட்டி ஏன் முடியாது என்று கேட்டார். பின்னர் இந்த பிரச்சனையை விட்டு விட்டு பாலாஜி முருகதாஸ் தன்னுடைய சாதனைகளைப் பற்றி கூறி வந்தார். இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து ஜோ மைக்கேல் விளக்கமளித்துள்ளார்.

- Advertisement -

அதில், பாலாஜி முருகதாஸ், பேசணும்னு பேசி இருக்கார். அவர் பேசியதற்கு அவர் பதில் சொல்லி ஆகணும் இல்லை மன்னிப்பு கேட்க வேண்டும். அவருக்கு எங்கள் சார்பில் ஒரு சட்ட நோட்டீஸ் எங்கள் வக்கீல் மூலமாக வழங்கப்படும். அவர் டுபாகூர் என்று சொல்லி இருக்கார். அவர் டுபாகூர் என்று சொன்ன அந்த நிறுவனம் அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட ஒரு pageant நிறுவனம். மேலும், பாலாஜி முருகதாஸ் பங்கேற்ற ஒரே தேசியா pageant என்றால் அது femina நடத்திய Mr.india pageant தான். அதில் கூட இவர் வின்னர் கிடையாது.

இவர் பிக் பாஸில் பேசிய போது நான் ஒரு pageant  நிகழ்ச்சியை நடத்தினேன் என்று கூறியுள்ளார். ஆனால், அவர் சொன்னது போல mr&mrs சவுத் இந்தியா கிடையாது. அவர் நடத்தியது Mr&Mrs இந்துஸ்தான், அதுவும் அவர் ஓனர் கிடையாது என்று கிழித்து தொங்கவிட்டுள்ளார். அதே போல பாலாஜி முருகதாஸ் பெற்ற Mr இந்தியா பட்டம் கடந்த ஜூன் மாதமே காலாவதி ஆகிவிட்டதாகவும், எனவே, அவர் அந்த பட்டத்தை தற்போது பயன்படுத்தவே முடியாது என்றும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது என்றும் ட்விட்டர் பதிவிட்டுள்ளார் ஜோ மைக்கேல்.

-விளம்பரம்-
Advertisement