அந்த முரடனுக்கு ஏன் சப்போர்ட் பண்றீங்க – ரசிகரின் கேள்விக்கு பாலாஜி அளித்த பதில்.

0
14177
balaji

விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் சர்ச்சை நாயகனாக வலம்வந்தவர் பாலாஜி. பாலாஜி பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை எக்கச்செக்க சர்ச்சைகளில் சிக்கினார். அதிலும் ஒரு எபிசோடில், பாலாஜி, சனம் ஷெட்டியை அட்ஜெஸ்ட்மண்ட் என்ற வார்த்தையை குறிப்பிட்டு அவதூறாக பேசி இருந்தார் என்று சர்ச்சை எழுந்தது. அதே போல ஆரியிடம் மரியாதை குறைவாக பேசியது, மைக்கை தூக்கி போட்டு உடைத்து என்று பல சர்ச்சைகளில் சிக்கிய பாலாஜி ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் பலர் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸுக்கு பின் பாலாஜி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டதாவது, தம்பி தங்கச்சி எல்லாருக்கும் நன்றி. நான் பிக் பாஸ் உள்ளே இருக்கும் போது வெளியில் இருந்த என்னுடைய நண்பர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரங்களே எனக்கு துரோகம் செய்தனர், நீங்கள் தான் எனக்கு ஒரு தூணாக இருந்தீர்கள். அதை நினைத்து பெருமையடைகிறேன். எந்த வருத்தமும் இல்லை, மனதார விளையாடி இந்த 105 நாட்களை அனுபவித்தேன் என்று பதிவிட்டு இருந்தார் பாலாஜி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவதாக வந்த பாலாஜிக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்துக்கள் குறித்து அவர் அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

இதையும் பாருங்க : 98 வயதில் கொரோனாவை வென்றார். ஆனால், விதியை வெல்ல முடியலேயே – காலமானார் நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி.

- Advertisement -

அந்த வகையில் ரசிகர் ஒரு பாலாஜிக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த உரையாடலில் பாலாஜியை ஏன் சப்போர்ட் செய்கிறீர்கள். அவர் மிகவும் முரட்டுத்தனமான நபர். அவருக்கு இதுபோன்ற சப்போர்ட்டுக்கு தகுதியானவர் என்று நினைக்கிறீர்களா ? என்று கேட்டிருந்தார் அதற்கு பதிலளித்த அந்த நபர் அவர் மிகவும் சிறந்த மனிதர். அவருடைய குணம் எனக்கு பிடித்திருக்கிறது. அவர் நினைப்பதைச் சொல்ல என்றும் பயந்தது கிடையாது. அதனால் நான் அவரை மிகவும் நேசிக்கிறேன் என்று ஒரு இறந்தார்.இந்த உரையாடலுக்கு பதில் அளித்துள்ள பாலாஜி அது முரட்டுத்தனம் இல்லை நம்பிக்கை பிரதர். தன்மேல் ஒருவன் கொண்ட நம்பிக்கை என்று கூறியுள்ளார்.

அதே போல நான் நல்லவன் என்று பெயர் வாங்க உள்ளே போல. பாலாவா இருந்து உங்களுக்கு பிடிக்குமா என்று பார்க்கத்தான் போனேன். எனக்கு கிடைச்சது ஆறுகோடி கோப்பை. நான் என்னுடைய மனதில் தோன்றியதை மறைக்காமல் பேசினேன். இருப்பினும் நீங்கள் அனைவரும் என்னை விரும்பி உள்ளீர்கள். எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் இருந்தது நான் நல்ல மனிதனா இல்லை கெட்ட மனிதனா என்று, நல்லவன் தான் என்று எனக்கு விடை கிடைத்திருக்கிறது. அது நீங்க சொல்லிட்டீங்க வாழ்க்கை முழுவதும் இது ஒன்று போதும் எனக்கு என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement