98 வயதில் கொரோனாவை வென்றார். ஆனால், விதியை வெல்ல முடியலேயே – காலமானார் நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி.

0
1642
unni

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தற்போது வரை ஆட்டிப்படைத்தது வரும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு சரியான மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மறந்தும் 100 சதவீதம் சரியாக வேலை செய்யவில்லை. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது.

pammal

சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது. பிரபல பின்னணி பாடகரான எஸ் பி பி, வசந்த் அன் கோ உரிமையாளர் வசந்த குமார் என்று பலர் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தனர். அதே போல நடிகர் விஷால் தந்தை, நடிகர் கருணாஸ், நடிகர் சரத்குமார் என்று பல நடிகர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தனர்.

இதையும் பாருங்க : வெளிய வந்து பாத்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது – ரியோ வெளியிட்ட முதல் வீடியோ.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையிலும் பிரபல நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி காலமாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையாள நடிகரான இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். ரஜினியின் சூப்பர் ஹிட் படமான சந்திரமுகி படத்தில் இவர் நடித்துள்ளார். அதே போல கமல் நடிப்பில் வெளியான ‘பம்மல் கே சம்மந்தம்’ படத்திலும் இவர் நடித்து இருந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கண்ணூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப் பட்டார்.

பின்னர் சிகிச்சை பெற்று வந்த அவர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தார். கொரோனாவில் இருந்து மீண்டு வந்த உன்னி கிருஷ்ணன் நம்பூதிரியின் மகன் பவதாசன் கூறும்போது, அப்பா சின்ன வயதில் பாடிபில்டராக இருந்தவர். உடல்நலம் பேணுவதில் ஆர்வமுடையவர். அதனால் அவர் கொரோனாவை வென்றுள்ளார் என்று கூறி இருந்தார். இன்று மாலை 6  மணியளவில் பயன்னூர் கூட்டுறவு மருத்துவமனையில் காலமாகிவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர், அவருக்கு வயது 98. இதை தொடர்ந்து பல்வேறு தமிழ் மற்றும் மலையாள திரைத்துறையினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

-விளம்பரம்-

Advertisement