பிக் பாஸில் இருந்து வெளியில் வந்தவுடன் தனது வெள்ளித்திரை அறிவிப்பு குறித்து பாலாஜி.

0
2467
balaji

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக தான் இருந்தார். அதிலும் ஒரு எபிசோடில், பாலாஜி, சனம் ஷெட்டியை அட்ஜெஸ்ட்மண்ட் என்ற வார்த்தையை குறிப்பிட்டு அவதூறாக பேசி இருந்தார் என்று சர்ச்சை எழுந்தது. அதே போல ஆரியிடம் மரியாதை குறைவாக பேசியது, மைக்கை தூக்கி போட்டு உடைத்து என்று பல சர்ச்சைகளில் சிக்கிய பாலாஜி ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் பலர் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : வருங்கால கணவரை அறிமுகம் செய்து வைத்த லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை நக்‌ஷத்ரா.

- Advertisement -

இருப்பினும் இவருக்கு இந்த சீசனில் இரண்டாம் இடம் கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த பாலாஜி,நான் நல்லவன் என்று பெயர் வாங்க உள்ளே போல. பாலாவா இருந்து உங்களுக்கு பிடிக்குமா என்று பார்க்கத்தான் போனேன். எனக்கு கிடைச்சது ஆறுகோடி கோப்பை. நான் என்னுடைய மனதில் தோன்றியதை மறைக்காமல் பேசினேன். இருப்பினும் நீங்கள் அனைவரும் என்னை விரும்பி உள்ளீர்கள். எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் இருந்தது நான் நல்ல மனிதனா இல்லை கெட்ட மனிதனா என்று, நல்லவன் தான் என்று எனக்கு விடை கிடைத்திருக்கிறது. அது நீங்க சொல்லிட்டீங்க வாழ்க்கை முழுவதும் இது ஒன்று போதும் எனக்கு என்று பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

அதே போல் சமூக வலைதளத்தில் தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் அடிக்கடி பதில் அளித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில், ட்விட்டரில் ரசிகர் ஒருவர் ரசிகர் ஒருவர், உங்களை மிகவும் மிஸ் செய்வோம் என்று கூற, அதற்கு பாலாஜி ‘விரைவில் என்னை வெளித்திரையில் பார்க்கலாம்’ என்று பதில் அளித்துள்ளார். பாலாஜி முருகதாஸ், பிரபல நடிகை மீனாவுடன் ஜீ ஆப்பில் வெளியான ஒரு வெப்சீரிஸில் நடித்துள்ளார். ‘கரோலின் காமாக்ஷி (Karoline Kamakshi)’ என்ற அந்த தொடரில் பாலாஜி முருகதாஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement