வருங்கால கணவரை அறிமுகம் செய்து வைத்த லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை நக்‌ஷத்ரா.

0
2526
nakshatra

இந்த கொரோனா சமயத்திலும் பல்வேறு நடிகர் நடிகைகள் சத்தமில்லாமல் திருமணத்தை முடித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல தொகுப்பாளினியும் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையுமான நக்சத்ரா நாகேஷ் தனது வருங்கால கணவரை அறிமுகம் செய்துள்ளார். சினிமா நடிகைகளை விட தற்போது சீரியல் நடிகைகள் தான் இல்லத்தரசிகள் மனதில் மிகவும் எளிதாக இடம்பிடித்துவிடுகின்றனர். அந்த வகையில் தொகுப்பாளினியாக ஆரம்பத்தில் அறிமுகமாகி பின்னர் பஞ்சுமிட்டாய் என்ற கதாபாத்திரத்தின் மூலம் இல்லத் தரசிகள் மனதை கொள்ளைகொண்டவர் நடிகை நக்சத்ரா நாகேஷ்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எத்தனையோ சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிடுகிறது. அதே போல மற்ற தொலைக்காட்சிகளுக்கு போட்டியாக சன் டிவி எதாவது ஒரு சீரியலை ஆரம்பித்துவிடுகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை போல சன் தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்ட சீரியல் தான் லட்சுமி ஸ்டோர்ஸ்.

இதையும் பாருங்க : ஈஸ்வரன் படத்தில் இடம்பெற்ற அசுரன் வசனம் – ட்விட்டரில் Bio வை மாற்றி ட்ரெண்டிங்கில் வந்த தனுஷின் புதிய பட்டப்பெயர்.

- Advertisement -

இந்த சீரியலில் பஞ்சுமிட்டாய் என்ற செல்லப்பெயரோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நக்சத்ரா. முன்னனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானவில் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் நட்சத்திர நாகேஷ். அதற்கு பிறகு இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். பொது விழாக்கள், சினிமா விழாக்கள்,சின்னத்திரை நிகழ்ச்சிகள் என அனைத்தையும் இவர் தொகுத்து வழங்கி உள்ளார். நட்சத்திர நாகேஷ் அவர்கள் சேட்டை, வாயை மூடி பேசவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் தான். நட்சத்திரா நாகேஷ் அவர்கள் “வணிகன்”என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். 28 வயதாகும் நக்‌ஷத்ரா நாகேஷ் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறாராம். சமீபத்தில் தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement