அவர்லாம் ஓனர் இல்ல, உள்ள போய் விளம்பரம் செஞ்சிகிட்டு இருக்கார், சின்ன பையன். பாலாஜியை கிழித்து தொங்கவிட்ட ஜோ மைக்கேல்.

0
86645
balaji
- Advertisement -

கடந்த 10ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி மற்றும் பாலாஜி முருகதாஸ் பேசிக்கொண்டிருக்கையில் பாலாஜி முருகதாஸ் நான் ஒரு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சவுத் இந்தியா என்ற பெயரில் pageant ஒன்றை நடத்தினேன் என்று கூறினார் அதற்கு சனம் செட்டி எப்போது என்று கேட்டதற்கு பாலாஜி முருகதாஸ் இது உங்களுடையது மாதிரி டுபாக்கூர் கிடையாது என்று கூறினார். உங்களுடைய நிகழ்ச்சிகளில் எல்லாம் யாரும் இன்டர்நேஷனல் லெவலுக்கு செல்ல முடியாது என்று பாலாஜி முருகதாஸ் கூறினார். அதற்கு சனம் செட்டி ஏன் முடியாது என்று கேட்டார். பின்னர் இந்த பிரச்சனையை விட்டு விட்டு பாலாஜி முருகதாஸ் தன்னுடைய சாதனைகளைப் பற்றி கூறி வந்தார். இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து ஜோ மைக்கேல் விளக்கமளித்துள்ளார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-11.png

அதில், பாலாஜி முருகதாஸ், பேசணும்னு பேசி இருக்கார். அவர் பேசியதற்கு அவர் பதில் சொல்லி ஆகணும் இல்லை மன்னிப்பு கேட்க வேண்டும். அவருக்கு எங்கள் சார்பில் ஒரு சட்ட நோட்டீஸ் எங்கள் வக்கீல் மூலமாக வழங்கப்படும். அவர் டுபாகூர் என்று சொல்லி இருக்கார். அவர் டுபாகூர் என்று சொன்ன அந்த நிறுவனம் அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட ஒரு pageant நிறுவனம். மேலும், பாலாஜி முருகதாஸ் பங்கேற்ற ஒரே தேசியா pageant என்றால் அது femina நடத்திய Mr.india pageant தான். அதில் கூட இவர் வின்னர் கிடையாது. இவர் பிக் பாஸில் பேசிய போது நான் ஒரு pageant  நிகழ்ச்சியை நடத்தினேன் என்று கூறியுள்ளார். ஆனால், அவர் சொன்னது போல mr&mrs சவுத் இந்தியா கிடையாது. அவர் நடத்தியது Mr&Mrs இந்துஸ்தான், அதுவும் அவர் ஓனர் கிடையாது என்று கிழித்து தொங்கவிட்டுள்ளார்.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் இவர் குறித்து ஷாக்கிங் தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதவாது, பாலாஜி சொன்னார் தன்னுடைய பெற்றோர்கள் தன்னை சரியாக வரவில்லை என்று நாம் அவரை சரியாகத்தான் வளர்க்கவில்லை அப்படி ஒழுங்காக வளர்த்திருந்தால், கடந்த அக்டோபர் 6ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு நுங்கம்பாக்கத்தில், சங்கீதா ஹோட்டல் எதிரில் ஒரு ஸ்விக்கி டெலிவரி பாய்யை ஒரு கார் இடித்து இருக்காது , அந்த காரில் இருந்து குடித்துவிட்டு பாலாஜி ஓடிச்சென்று இருக்க மாட்டார்.

இந்த வழக்கு நுங்கம்பாக்கம் போக்குவரத்து காவல் துறையில் இன்னமும் இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும், பேசிய ஜோ மைக்கேல். யாஷிகா மற்றும் பாலாஜி இருவரும் நண்பர்கள் தான் இந்த கார் விபத்து நடந்தபோது நான் வெளியூரில் இருந்தேன். யாஷிகா குடித்துவிட்டு கார் விபத்தை ஏற்படுத்தி விட்டார் என்று செய்தியை நான் தொலைக்காட்சியில் பார்த்த உடன் யாஷிகாவை தொடர்பு கொள்ள முயன்றேன். அப்போது யாசிக்காவின் நண்பரை தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்தேன்.

-விளம்பரம்-

அப்போது அவர் என்னிடம் சொன்னது யாஷிகா அந்த காரில் இல்லை முடித்துவிட்டு நாங்கள் தனியாக போய்விட்டோம் எங்கள் கூட வந்த பாலாஜியும் அவரது நண்பரும் வேறு ஒரு காரில் போய் மோதி விட்டார்கள். அப்போது பாலாஜி எங்களுக்கு கால் செய்து நாங்கள் விபத்தை செய்துவிட்டோம் எங்களுக்கு உதவி வேண்டும் என்று அழைக்கும் போது தான் நாங்கள் அங்கே வந்தோம். ஆனால் அங்கே இருந்த மீடியாகாரர்கள் எங்களை பார்த்ததும் நாங்கள் தான் விபத்தை ஏற்படுத்தியதாக நினைத்து விட்டார்கள் என்று என்னிடம் கூறியதாக ஜோ மைக்கேல் கூறியுள்ளார்

Advertisement