அழகி போட்டிகளில் அட்ஜஸ்ட்மன்ட், பாலாஜியின் சர்ச்சை கருத்து காரணமாக சட்ட நடவடிக்கை.

0
13533
sanam
- Advertisement -

கடந்த 10ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி மற்றும் பாலாஜி முருகதாஸ் பேசிக்கொண்டிருக்கையில் பாலாஜி முருகதாஸ் நான் ஒரு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சவுத் இந்தியா என்ற பெயரில் pageant ஒன்றை நடத்தினேன் என்று கூறினார் அதற்கு சனம் செட்டி எப்போது என்று கேட்டதற்கு பாலாஜி முருகதாஸ் இது உங்களுடையது மாதிரி டுபாக்கூர் கிடையாது என்று கூறினார். உங்களுடைய நிகழ்ச்சிகளில் எல்லாம் யாரும் இன்டர்நேஷனல் லெவலுக்கு செல்ல முடியாது என்று பாலாஜி முருகதாஸ் கூறினார். அதற்கு சனம் செட்டி ஏன் முடியாது என்று கேட்டார். பின்னர் இந்த பிரச்சனையை விட்டு விட்டு பாலாஜி முருகதாஸ் தன்னுடைய சாதனைகளைப் பற்றி கூறி வந்தார்.

-விளம்பரம்-

நேற்றய நிகழ்ச்சியில் பாலாஜி மற்றும் சனம் ஷெட்டிக்கு இடையிலான பிரச்சனை தான் கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட்டது. நேற்றைய நிகழ்ச்சியில் சனம் மற்றும் பாலாஜிக்கு ஒரு மிகப் பெரிய சண்டை வெடித்தது. போட்டியாளர்கள் அனைவரும் வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது பாலாஜி, சனம் ஷெட்டியை தருதலை என்றால் என்ன தெரியுமா என்று கேட்டார். அதற்கு சனம் ஷெட்டி தெரியாது என்று சொல்ல அது நீதான் என்று கூறியிருந்தார் பாலாஜி. இதனால் அங்கிருந்து சனம் ஷெட்டி கோபமாக எழுந்து வந்து விட்டாலர். அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து பாலாஜியிடம் ஏன் என்னை தறுதலை என்று கூறினாய் என்று சண்டையிட்டார் சனம் ஷெட்டி.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் யாரிடம் பிரச்சனை இருக்கிறதோ அதனை புகாராக எழுத வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்து இருந்தார். மேலும், அப்படி குற்றம் சாட்டப்படும் போட்டியாளர்கள் இருவரையும் கூண்டுக்குள் நிற்கவைத்து நீதிபதியாக சுசித்ரா பஞ்சாயத்து செய்து வைத்திருக்கிறார். பாலாஜி மற்றும் சனம் ஆகி இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டி புகார்களை எழுதினர். ஆனால், அந்த ப்ரோமோவை நீக்கி இருக்கிறது விஜய் டிவி.

அதற்கு முக்கிய காரணமே சனம் ஷெட்டி எழுதிய புகாரில் பாலாஜி குறித்து எதோ சர்ச்சையான விஷயத்தை எழுதி இருப்பதால் தான் என்று கூறப்படுகிறது. சனம் ஷெட்டி எழுதிய கடிதத்தில் பாலாஜி,நான் டைட்டில் வின்னராக இருக்கும் பியூட்டி பேஜன்டுக்கு எதிராக அட்ஜஸ்ட்டமென்ட் மற்றும் காம்ப்ரமைஸ் என்ற வார்த்தையை பயன்டுத்தியதாகவும். யாரோ ஒரு மூன்றாம் நபர் சொன்ன ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்னுடைய நேர்மைக்கு களங்கம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயம் வெளியானால் கண்டிப்பாக சமந்தபட்ட அந்த பியூட்டி பேஜன்ட் நிறுவனமும் அதில் பங்குபெற்ற அணைத்து பெண் போட்டியாளர்களும் பாலாஜிக்கு எதிராக குற்றம் சாட்ட வாய்ப்பு இருக்கிறது. எனவே, இதனை பெரிதாக்க விரும்பாமல் ப்ரோமோவையே நீக்கியது விஜய் டிவி.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் பாலாஜி சொன்ன அந்த பியூட்டி பேஜன்டை நடத்திய ஜோ மைக்கேல், இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார். அதில் , பாலாஜி முருகதாஸ் டுபாக்கூர் என்று சொன்னதற்கான காரணம் தற்போது நிரூபணமாகியுள்ளது ஏற்கனவே டுவிட்டரில் கதறும் அந்த மூன்றாம் நபர் (மீரா மிதுன்)பற்றி கவலை இல்லை. நாங்கள் இதை சட்டரீதியாக எதிர்கொள்ள இருக்கிறோம். சட்டரீதியாக இந்த வீடியோவின் எடிட் செய்யப்படாத பதிவை நாங்கள் பெறுவோம் என்று கூறியிருக்கிறார். ஜோ மைக்கேல், ஏற்கனவே பாலாஜி முருகதாஸ் டுபாக்கூர் என்று கூறியதற்காக அவர்மீது வழக்கு தொடர இருப்பதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement