சென்ராயனிடம், சிவகார்த்திகேயன் பற்றிய உண்மையை சொன்ன பாலாஜி..! ஷாக்கான சென்ராயன்..?

0
366
Bigg-boss-sivakarthikeyan

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ச்சி என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று. தொலைக்காட்சியில் சாதாரண தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத ஒரு நடிகராக இருந்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் ‘பாய்ஸ் vs கேர்ள்ஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற போது நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடந்த ஒரு அனுபவத்தை பகிர்ந்துள்ளார் தாடி பாலாஜி.

balaji
balaji

நடிகர் தாடி பாலாஜியும், நடிகர் சிவகார்த்திகேயனும் விஜய் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான பாய்ஸ் vs கேர்ள்ஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக பங்குபெற்றனர்.இந்நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள நடிகர் தாடி பாலாஜி, சென்றயான் மற்றும் யாஷிகாவிடம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் துவக்க விழாவில் தான் நடனமாடியது குறித்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது சிவகார்த்திகேயன் குறித்து பேசிய பாலாஜி, சிவாவும் நானும் பாய்ஸ் vs கேர்ள்ஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது திட்டு வாங்கிகொண்டே தான் இருப்போம் ஏனென்றால் நாங்கள் ஆடுவதை விட இருவரும் அதிகம் பேசிகொண்டே இருப்போம் என்று பாலாஜி கூறினார். பின்னர் சிவா மிகவும் கோவமடைவார், அந்த நிகழ்ச்சியில்தான் நான் அவருடைய கோபத்தை பார்த்தேன் என்று பாலாஜி கூறியதும் சென்ராயன் மிகவும் ஆச்சரியமடைந்தார்.

பின்னர் அந்த நிகழ்வை விவரித்த பாலாஜி, சிவகார்திகேயனுக்கும் பிரஜனின் மனைவிக்கும்(நடிகை சாண்ரா ) சண்டை வந்து விட்டது.அப்போது நான் சிவாவின் கையை பிடித்து அவரை அமைதி படுத்தினேன், ஆனால் சிவா ‘எனக்கும் தெரியும் கோவம்னா என்னனு, நீங்க இப்படினா நானும் அப்படித்தா ‘ என்று டென்ஷன் ஆகிவிட்டார் என்று பாலாஜி கூறியிருந்தார்.

Balaji-big-boss

இதையும் படிங்க:

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாய்ஸ் vs கேர்ள்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற நடிகர் சிவகார்த்திகேயன் ஒருமுறை பெண் போட்டியாளர்கள் செய்த கிண்டல்களால் ‘எனக்கு காமெடியும் பண்ண தெரியும், சீரியசாகவும் இருக்க தெரியும். நான் இங்க யாரையும் திட்டுவதற்காகவும் சண்டை போடுவதற்காகவும் வரவில்லை’ என்று மிகவும் ஆவேசமாக பேசியவிட்டு இறுதியில் அந்த நிகழ்ச்சியை விட்டே வெளியேறுகிறேன் என்ற அளவிற்கு கோபப்பட்டார். இறுதியில் அவரை சமாதானபடுத்தி நிகழ்ச்சிக்கு மீண்டும் பங்குபெற வைத்தனர்.

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள பாலாஜி, இந்த நிகழ்வை நினைவுகூர்ந்து இத்தனை ஆண்டுகள் கழித்து சிவகார்திகேயனின் ஜாலியான பக்கத்திற்கு பின்னால் இருக்கும் வேறு ஒரு சீரியஸான முகத்தை மீண்டும் பகிர்ந்துள்ளளார்.