அவனுக்கு ஓட்ஸ் அதிகமாக இருக்குடா – ஆரி பற்றி வயிற்றேரிச்சலில் பேசிய சம்யுக்தா. Unseen வீடியோ இதோ.

0
4962
sam
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

தற்போது பாலாஜி ஆரி ரியோ சோம் சேகர் கேப்ரில்லா ரம்யா பாண்டியன் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி ஆகியுள்ள நிலையில் யார் டைட்டிலை வெல்வார் என்பதற்கான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.சீசனில் ஆரி தான் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர். எனவே, இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடிக்கப்போவது யார் என்பது தான் போட்டியே. இந்த வாரம் ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்கள் ரீ-என்ட்ரி கொடுத்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : அந்த 33 குழந்தைகளுக்கு பிஸ்கேட் வாங்க உதவும்னு இப்படி பேசிட்டேன் – வைரல் பெண் கண்ணீர் பேட்டி.

- Advertisement -

உள்ளே சென்ற பெரும்பாலானோரிடம் வெளியில் தனக்கு எந்த வகையான ஆதரவு இருக்கிறது என்று கேட்டு வருகிறார் பாலாஜி. அவருக்கு இருக்கும் ஆதரவை பற்றி தெரிந்துகொள்வதைவிட ஆரிக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவு பற்றி அறிந்துகொண்டு கொஞ்சம் பொறாமையில் பொங்கி தான் வருகிறார் பாலாஜி. அந்த வகையில் நேற்று பிக் பாஸ் வீட்டில் சம்யுக்தாவை பார்த்ததும் பாலாஜி ஆனந்த கண்ணீரில் ஆழ்ந்தார். அதே போல சம்யுக்தா, பாலாஜியை ஒரு படி மேலே சென்று கொழந்தை என்று பாசத்தில் தழுவினார்.

இப்படி ஒரு நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் சம்யுக்தாவிடமும் வெளியில் தன்னுடைய வெற்றி வாய்ப்பை பற்றி பாலாஜி கேட்டுக்கொண்டு இருந்தார். அப்போது சம்யுக்தா பேசுகையில்,எப்படினே தெரியல அவனுக்கு ஓட்ஸ் அதிகமாக இருக்குடா, உன்னை விட ஆரிக்கு தான் அதிக ஓட்டு விழுந்து. வருகிறது. அவருக்கு 4000 ஓட்டு வந்தால் உனக்கு 1000 ஓட்டு விழுகிறது என்றும், வெளியில் அப்படி ஒரு குழப்பம் போய் கொண்டு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

இந்த வீடியோவை பார்த்த பலரும் எப்படி சம்யுக்தா மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்று சொல்லலாம். அதே போல வெளியில் நடைபெறும் வாக்கெடுப்புகளை பற்றி சம்யுக்தா எப்படி பாலாஜியிடம் சொல்லலாம். இது விதிகளுக்கு அப்பார்பட்டது கிடையாதா என்றும் விமர்சித்து வருகின்றனர். அதே போல நேற்றய நிகழ்ச்சியில் கூட, சம்யுக்தா பேசிய போது வெளியில் அனைவரோம் பாலாஜிக்கு நான் ஆதரவாக இருக்கிறேன் என்று சொல்வது வேடிக்கையாக இருந்தது என்று கூறியிருந்தார். ஆனால், இதை பார்க்கையில் என்ன சொல்வது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement