மீடியாக்களில் சிக்கி சின்னா பின்னம் அடையும் பிரபலம் என்று பார்த்தால் அது நம்ம தாடி பாலாஜி தான். பாலாஜி அவர்கள் முதல்ல மனைவியுடன் பிரச்சனை பத்தி சொல்லி இருந்தாங்க. இப்ப வேற ஒரு பெண்ணுடன் தொடர்பு பத்தி எழுதிட்டு வர்றாங்க. ஆகமொத்தம் மீடியாவுக்கும் தாடி பாலாஜிக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்குன்னு சொல்லலாம். தாடி பாலாஜி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டாங்க. சின்னத்திரை, வெள்ளித்திரை என எல்லாத் துறையிலும் போய் இப்ப மீடியா துறையில் கலக்கிக் கொண்டிருக்கிறார். பாலாஜி போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு என அவங்க அலையாத இடமில்லை. இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம். இப்பக்கூட அந்த பிரச்சனைகள் தான் போயிட்டு இருக்கு. முதல்ல பாலாஜி,நித்யாவு இருவரும் கோர்ட்டில் விவாகரத்து போட்டு இருந்தாங்க. பின்னர் பிக் பாஸ் சீசன் 2 ல இரண்டு பேருமே கலந்துகொண்டாங்க. அதனால் ஷோ முடியும்போது ரெண்டு பேரும் சேர்ந்து விட்டார் என எல்லாரும் சந்தோஷப்பட்டு இருந்தோம். ஆனா, திடீர்னு அவங்க பிரிஞ்சு தான் வாழ்றாங்க.
அதோட கோர்ட் உத்தரவுப்படி அவங்க மகள் போஷிகா நித்யாவுடன் தான் வாழ்ந்து வருகிறார். அதுமட்டுமில்லாம மாதம் இரண்டு முறை போஷிகாவை தாடி பாலாஜி வீட்டுக்கு அழைத்து சென்று சில மணி நேரம் அவருடைய இருக்கலாம் என்றும் சொல்லி இருந்தாங்க. இப்படி போயிட்டு இருக்கும்போது மறுபடியும் பாலாஜி வேறொரு நபருடன் சம்பந்தப்படுத்தி வரும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் சில தினங்களாகவே வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் அந்த வீடியோவில் பேசும் ராஜ்துரை என்பவர் கூறியது, பாலாஜியின் முதல் மனைவியுடன் கணவர் தான் நான் என்று கூறினார். இந்த விஷயத்தை கேட்டு பாலாஜிக்கு ஷாக் ஆனதோ! இல்லையோ, வீடியோ பார்த்த நெட்டிசன்கள் அனைவரும் அதிர்ச்சி ஆனார்கள். வீடியோவில் ராஜ்துரை கூறியது, பாலாஜி உங்களால தான் என் குடும்பத்துல ரொம்ப பிரச்சினையா போயிட்டு இருக்கு. நீங்க தவறு மேல் தவறு பண்ணிட்டு போறீங்க. உங்களோட சினிமா குடும்பம் வேற, என்னோட குடும்பம் வேற. இனிமேலயாவது மரியாதையுடன் நடந்துக்குங்க. இவ்வளவு நாளா நான் தீபாவுக்கு பயந்து தான் பேசாம இருந்தேன். ஆனா அவங்களோட கேரக்டர் பத்தி தப்பா பேசறது நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன். செம கோவத்துல நான் இருக்கேன்.
இதையும் பாருங்க : மதுமிதாவை தொடர்ந்து மற்றொரு போட்டியாளரின் வீட்டிற்கே சென்ற சேரன். வைரலாகும் புகைப்படம்.
இதுக்கு மேல யாவது என் வீட்டுக்கு நீங்க வரதோ, என் மனைவியோட பேசுவதோ நான் ஒருபோதும் ஒத்துக்க மாட்டேன். அப்படி மீறி பண்ணிட்டு இருந்தீங்கனா உங்க மேல கேஸ் போட்டு விடுவேன் என ஆவேசத்துடன் ராஜ்துரை கூறினார். மேலும், இராஜதுரை பேசிய வீடியோவில் நித்யாவை பற்றியும் பேசி இருந்தார். இந்த வீடியோ குறித்து அவரிடம் கேட்டபோது நித்யா கூறியது, நானுமே அந்த வீடியோவை பார்த்தேன். உண்மையிலேயே பாலாஜியின் முதல் மனைவி தீபா தான். அவரோட பையன் தான் தருண். ஆனால், இந்த ராஜ்துரை பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. பாலாஜி முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்த பிறகு தான் நாங்கள் கல்யாணம் பண்ணிகிட்டோம். ஆனால், எங்களுக்கு திருமணம் ஆனதற்கு பிறகு அவர் முதல் மனைவியுடன் தொடர்பிலிருந்தது எனக்கு சமீபத்தில் தான் தெரிய வந்தது. அப்ப ஏன்? என்ன கல்யாணம் செஞ்சுகிட்டிங்கன்னு நான் கேட்டேன்.
உங்க முதல் மனைவி மேல விருப்பம்ன்னா நீங்க அவர்களுடைய வாழ வேண்டிய தானே, ஏன் என்னுடைய வாழ்க்கைல நுழைந்து விளையாடுகிறிங்க என்று கோவத்துடன் நித்யா பேசினார்.இதனைத்தொடர்ந்து நித்யா பேசியது குறித்து பாலாஜியிடம் கேட்டபோது பாலாஜி சொன்னது, வீடியோ உள்ள கேரக்டர் யாருனே எனக்கு சத்தியமா தெரியாது. என்னுடைய கணிப்பு படி பார்த்தால் என் பேர மறுபடியும் கெடுப்பதற்காக தான் இவங்க இப்படி எல்லாம் பண்றாங்கன்னு எனக்கு தெரியுது. உண்மையான தைரியமான, தில்லிருந்தா ஆள இருந்தா முகத்தை நேரில் காட்டி பேச சொல்லுங்க. அது மட்டும் இல்லாம நான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த போது எவ்வளவு பணம் கிடைத்து, பணத்தை என்ன பண்ணப் போறீங்கன்னு என்கிட்ட பேசிட்டு இருந்தாங்க. அவங்க பண்றதெல்லாம் பாத்தா என் பணத்தை டார்கெட் பண்றதுக்காக தான் இப்படி பண்றாங்களான்னு எனக்கு தோணுது. அதுமட்டுமில்லாம நித்தியா பிரண்டுனு சொல்லிட்டு ஒரு சப்-இன்ஸ்பெக்டர் வைத்து என்னை பயமுறுத்த பாக்குறாங்க. அதில் அது அந்த சப்-இன்ஸ்பெக்டர் நித்யாவை தப்பாவும் வழிநடத்துகின்றார் என எனக்கு தெரியுது. அதனுடைய தொடர்ச்சியாக தான் இந்த வீடியோ இருக்கனும்ன்னு பாலாஜி கூறினார்.