மதுமிதாவை தொடர்ந்து மற்றொரு போட்டியாளரின் வீட்டிற்கே சென்ற சேரன். வைரலாகும் புகைப்படம்.

0
56897
Cheran
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தான் மத்த ரெண்டு சீசன்களை விட பட்டையைக் கிளப்பியது என்று கூட சொல்லலாம். மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மத்த ரெண்டு சீசன்களை விட காதல், கலவரங்கள், சண்டைகளுக்கு பஞ்சமேஇல்லாமல் இருந்தது. அந்த அளவிற்கு வேற லெவல்ல போயிருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே எல்லாருக்கும் தெரியும் 100 நாட்கள், கேமராக்கள், எந்த ஒரு தகவல் தொடர்பும் இல்லாமல் இருப்பது. மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சற்றே தெரிக்க விடுமளவிற்கு சூப்பராக இருந்தது.

-விளம்பரம்-
Image

இந்த வருடம் நடந்த பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சி உலக அளவில் ரசிகர்களிடையே பாராட்டும், வாழ்த்துக்களும் பெற்று வந்தன. பிக் பாஸ் வீட்டில் ஒரு சிறந்த நண்பர், அப்பா, அண்ணன் என்ற எல்லா உறவு முறைகளுக்கும் தகுதியானவர்களாக இருந்தவர் தான் இயக்குனர் சேரன். இயக்குனர் சேரன் அவர்கள் திரையுலகில் மட்டுமல்ல இயல்பான வாழ்க்கையிலும் சிறந்தவர் என்று இந்த பிக் பாஸ் வீட்டில் நிரூபித்துவிட்டார். மேலும், மதுமிதா பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை சேரனிடம் தான் மிகவும் அன்பாக இருந்தார். அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மதுமிதாவை சேரன் ஏன் இன்னும் சந்திக்கவில்லை என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

இதையும் பாருங்க : கண்டக்டராக இருந்த போது ரஜினிக்கு ஏற்பட்ட முதல் காதல். ரகசியத்தை சொன்ன பாட்ஷா நடிகர்.

- Advertisement -

ரசிகர்களின் கருத்திற்கு செவி சாய்த்த சேரன், வணக்கம், நான் மதுமிதாவிடம் பேசி கொண்டு தான் இருக்கிறேன். விரைவில் அவரை சந்திப்பேன் என்று பதில் அளித்திருந்தார். அதனை உறுதி செய்யும் விதமாக மதுமிதாவின் கணவர் மோசஸ், நலம் விசாரித்தமைக்கு மிக்க நன்றி என்று தனது ட்விட்டர் பக்கத்தில்பதிவிட்டிருந்தார். இதனால் விரைவில் மதுமிதாவை, சேரன் சந்திப்பார் என்று ரசிகர்கள் எதிர் பார்த்து வந்தனர். இந்த நிலையில் சொன்னதை போலவே சேரன் மதுமிதாவை சந்தித்துள்ளார். சமீபத்தில் மதுமிதாவை சந்திக்க அவரது வீட்டிற்கே சென்றுள்ளார் சேரன். மேலும், சேரனுக்கு, மதுமிதா விருந்தும் வைத்து அசத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

மதுமிதாவுக்கு அடுத்தபடியாக ஷெரின் மற்றும் சாக்க்ஷி இருவரும் எப்பவுமே சேரன் மீது ஒரு நல்ல மரியாதையும் மதிப்பும் வைத்திருந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் கூட ஷெரின்,சாக்ஷி ஆகிய ரெண்டு பெரும் சேரனை சந்தித்து மகிழ்ந்து வந்தார்கள். இது அனைவருக்கும் தெரிந்தது தான். இந்நிலையில் தங்களுடைய தீபாவளியை ஷெரினும் ,சாக்ஷியும் சேரன் வீட்டிற்கு சென்று சேரன் குடும்பத்துடன் சந்தோசமாக கொண்டாடி வந்து உள்ளார்கள். மேலும், அவர்கள் தீபாவளி பண்டிகை போது எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வெளிவந்துள்ளது.

-விளம்பரம்-

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேரன், சாக்ஷியை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த புகைப்படங்களை நடிகை சாக்க்ஷி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், குடும்பத்துடன் ஒரு சிறப்பான தருணம். என்னடைய தந்தை மற்றும் சேரன் அண்ணாவின் உறவை பார்ப்பதற்கு மிகவும் அழகா இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார் சாக்க்ஷி. இந்த புகைப்படம் தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், சேரன் தனது நட்பை பிக் பாஸ் வீட்டில் இருந்ததை விட வெளியே நல்ல முறையில் கொண்டு செல்கிறார்கள் என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இருப்பினும் சேரன் இன்னமும் லாஸ்லியாவை சந்திக்காதது தான் ரசிகர்களுக்கு இன்னும் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.

Advertisement