விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 10 வாரங்களை கடந்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி ஆகிய 6 பேர் வெளியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று அறிவித்து நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்டு இருந்தனர். இந்த சீஸனில் வைல்டு கார்டு போட்டியாளர்களாக அர்ச்சனா மற்றும் சுசித்ரா நுழைந்து இருந்தார்கள். இதில் சுசித்ரா ஏற்கனவே வெளியேறி விட்டார். பொதுவாக வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள் மத்தியில் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். கடந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக மீரா மிதுன், கஸ்தூரி உள்ளே நுழைந்த பின்னர் நிகழ்ச்சியில் சூடு பிடித்தது. ஆனால், இந்த முறை அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த போது ஒரு கேம் சேஞ்சராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை, மாறாக அவர் தொடர்ந்து அம்மா சென்டிமென்டை வீசி வருகிறார். இவர் உள்ளே நுழைந்த நாள் முதலே தனக்கான ஒரு குழுவை அமைத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் ஒரு சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார் மேலும் இவர் எதை செய்தாலும் சரி என்று சொல்வதற்காகவே இருப்பது போல தான் ரியோ, நிஷா, சோம் ஆகியோர் இருக்கின்றனர். மேலும், அர்ச்சனா ஒரு குரூப்பை அமைத்து விளையாடி வருகிறார் என்று பலரும் கூறி வருகின்றனர். இதை பல முறை கமலே கூறியிருக்கிறார்.
இந்த சீசனில் அதிகம் பயன்படுத்திய வார்த்தைகள் என்றால் அது ‘குரூப்பீசம்’ மற்றும் ‘பேவரிசம்’ தான். அதிலும் அர்ச்சனா மற்றும் அவரது குழுவில் இருப்பவர்கள் தான் அடிக்கடி ‘பேவரிசம்’ காட்டி அவர்களை காப்பாற்றி வருகின்றனர் என்று அனிதா மற்றும் ஆரி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் அடிக்கடி பயன்படுத்தி வரும் வார்த்தையான ‘பேவரிசம்’ என்ற ஒரு வார்த்தையே இல்லை என்றும் அவர்கள் அனைவரும் தவறாக கூறி வருகிறார்கள் என்றும் பதிவிட்டுள்ளார் பாவனா.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், Favourism என்ற ஒரு வார்த்தையே கிடையாது. அது Favouri-ti-sm ஏன் இதனை யாரும் நிறுத்தவில்லை இந்த நிகழ்ச்சியை பார்த்து நம்முடைய குழந்தைகள் தவறான ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள கூடாது முடியலடா சாமி என்று தலையில் அடித்துக்கொண்டு வணக்கம் என்ற எமோஜிக்களையும் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் பாராட்டினாலும், ஒரு சில ரசிகர்கள் இது ரொம்ப முக்கியமா என்று நினைத்து வருகின்றனர்.