த்து கருமாந்தாரம் நீயெல்லாம் ஆம்பளயா.! சாண்டியை கேவலப்படுத்திய மதுமிதா.!

0
5363
sandy madhu
- Advertisement -

பிக் பாஸ்சின் நேற்றைய(ஜூலை 23) நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவருக்கும் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் குழுக்களாக பிரிந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும்.

-விளம்பரம்-

- Advertisement -

அந்த வகையில் இன்று மதுமிதாவிற்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் மதுமிதாவிற்கு முகத்தில் பேஸ்டை பூசிக்கொண்டு ‘மாரியம்மா மாரியம்மா’ பாடலுக்கு நடனமாட சொன்னார்கள். அதற்க்கு முதலில் சிரித்தபடி ஆடத்துவங்கினார் மதுமிதா, அப்போது சாண்டி ‘கொஞ்சம் ஹேவியா ஆடு’ என்று கூறிக்கொண்டே இருந்தார்.

சாண்டி மீண்டும் மீண்டும் ‘ கொஞ்சம் ஹேவியா ஆடு ‘ என்று கூறிக்கொண்டே இருந்ததால் ஒரு கட்டத்தில் கடுப்பான மதுமிதா சீக்கிரமா சொல்லுங்க எனக்கு மூஞ்செல்லாம் எரியுது என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார். அப்போது சாண்டி எரியுதா என்று எதார்த்தமாக கேட்க கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் மதுமிதா.

-விளம்பரம்-

இதனால் சாண்டியை சரமாரியாக திட்ட துவங்கினார் மதுமிதா, ஒரு கட்டத்தில் மிகவும் கோபத்தின் உச்சிகே சென்ற மதுமிதா, ஒருவர் கஷ்டப்படுவதை பார்த்து சிரிப்பவர் எல்லாம் ஆம்பளையா த்து என்று மிகவும் அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த துவங்கினார். இதனால் கொஞ்சம் கடுப்பான சாண்டி’வார்த்தையா கொஞ்சம் பாத்து பேசு ‘.என்றார்

இருப்பினும் கோபம் தணியாத மதுமிதா சாண்டியை கடுமையாக திட்டிகொண்டே.இருந்தார். இருப்பினும் சாண்டி ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அமைதியாக தான் இருந்தார். பின்னர் மற்ற போட்டியாளர்கள் மதுமிதாவை சமாதானம் செய்ய முயற்சித்த போதும், கோபம் தணியாத மதுமிதா, மற்ற வர்களை கலாய்க்கும் போது தன்னை கலாய்த்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள தெரியணும்.

அப்படி ஏற்றுக்கொள்ள தெரியவில்லை என்றால் மூடிக்கொண்டு (இந்த வார்த்தையை பயன்படுத்தியதற்கு மன்னிக்கவும்) இருக்கனும் என்று மிகவும் அநாகரீக வார்த்தைகளை பயன்படுத்தினார். இருப்பினும் இதற்கு எந்த கோபமும் அடையாத சாண்டி, மதுவின் கோபம் சற்று தணிந்ததும் அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டார். இதில் சாண்டி எந்த தவறையும் செய்யவில்லை என்றாலும் பிரச்னையை தீர்க்க அவராக மன்னிப்பு கேட்டது அவரின் பெருந்தன்மையை தான் குறிப்பிட்டது.

Advertisement