ஓகே சொன்ன பிந்து மாதவி நோ சொன்ன மேனஜர் – சூப்பர் ஹிட் பட வாய்ப்பை தவறவிட்டுள்ளாரே.

0
1496
Bindhu-Madavi
- Advertisement -

சிவ கார்த்திகேயன் நடித்த வருப்படாத வாலிபர் சங்கத்தில் கல்யாணி டீச்சராக நடித்தவர் நடிகை பிந்து மாதவி. என்னதான் அந்த படத்திற்கு முன்னாள் பல படங்கலில் நடித்தாலும் அவருக்கு ரசிகர்கள் கிடைத்தது வருத்தபடாத வாலிபர் சங்கத்தில் தான்.அந்த படத்திற்கு பிறகு பல தமிழ் படங்களில் நடித்த இவர் 2016 இல் வெளியான ஜாக்சன் துறை படத்திற்கு பிறகு ஆல் விளாசமே இல்லாமல். போய்விட்டார்.பின்னர் ஒரு வருட நீண்ட இடைவேளைக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார் பிந்து மாதவி.

-விளம்பரம்-
இயக்குநர் சுசீந்திரன்

பிந்து மாதவி நடித்த படங்களில் தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், கழுகு, தேசிங்கு ராஜா போன்ற படங்கள் வெற்றிடங்களாக அமைந்தது. ஆனால், பிந்து மாதவியை நினைவில் வைத்துக்கொள்ளலாம் அளவிற்கு இதுவரை எந்த படமும் வெளியாகவில்லை. சொல்லப்போனால் பிந்து மாதவி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதாக எந்த படத்திலும் நடிக்கவில்லை.

இதையும் பாருங்க : கிளாமரில் யாஷிகாவை மிஞ்சும் தங்கை. இன்ஸ்டாகிராம் புகைப்படைகளை பாருங்க.

- Advertisement -

ஆனால், பிந்து மாதவி சூப்பர் ஹிட் பட வாய்ப்பை ஒன்றை இழந்துள்ளார். அது தான் வெண்ணிலா கபடிக்குழு, தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் சுசீந்திரனும் ஒருவர். இவர் 2009 ஆம் ஆண்டு வெளி வந்த வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் பல படங்களை கொடுத்து உள்ளார். கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளி வந்த “கென்னடி கிளப்” மற்றும் “சாம்பியன்” ஆகிய இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

This image has an empty alt attribute; its file name is maxresdefault.jpg

இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் தன்னுடைய முதல் பட அனுபவத்தை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.எல்லோரும் தயாரிப்பாளரைத் தேடி அலைவார்கள். ஆனால், எனக்கு தயாரிப்பாளரே தானா முன்வந்து படம் தயாரிக்கிறேன் என்று சொன்னார். அதனை தொடர்ந்து நான் நடிகர்களை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தேன். சூரி, அப்புக்குட்டினு எல்லோரும் எனக்கு பழக்கம். அவங்களை எல்லாம் இந்தப் படத்துக்குள் கொண்டு வந்தேன்.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஹீரோ தேடல் ஆரம்பித்தது. இந்தக் கதையை முதலில் நான் ஜெய்கிட்ட தான் சொன்னேன். அவருக்காக நான் ரெண்டு மாதம் காத்திருந்தேன். ஆனால், அது ஒர்க் அவுட் ஆகலை. இந்த படத்திற்கு ஹீரோயினாக முதல் சாய்ஸ் பிந்து மாதவி தான். அவங்க நடிக்க `ஓகே’ சொல்லிட்டு அப்புறம் அவங்க கோ ஆர்டினேட்டர்கிட்ட இருந்து `நோ’னு பதில் வந்திடுச்சு என்று கூறியுள்ளார் சுசீந்திரன்.

Advertisement