பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின், சாக்க்ஷி, லாஸ்லியா ஆகிய மூவரின் முக்கோண காதல் கதையை பார்த்து ரசிகர்கள் சலிப்படைந்து விட்டனர். கவின், லாஸ்லியாவிடம் நெருக்கமாக இருப்பதால் கடுப்பான சாக்க்ஷி, கவினிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார்.
நேற்றைய நிகழ்ச்சியில் கூட கவின், லாஸ்லியா, சாக்க்ஷி ஆகிய மூவரின் பஞ்சாயத்தை தான் காண்பித்து கொண்டிருந்தனர். அதிலும் ஒவ்வொரு முறையும் கவின், லாஸ்லியா, சாக்க்ஷி ஆகியோரை ப்ரோமோவில் காண்பிக்கும் போது போடப்படும் சினிமா bgm தான் ரசிகர்களால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.
இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் சாக்க்ஷி மற்றும் மீரா பஞ்சாயத்தை முடித்து வைக்க கமல் குறும்படம் ஒன்றை போட்டு சாக்க்ஷியை வறுத்தெடுத்தார். அதன் பின்னர் பெண்களிடம் நெருக்கமாக பழகி வந்த கவினையும் வறுத்தெடுத்துள்ளார். தற்போது கமல், கவினை நக்கலடிக்கும் ப்ரோமோ ஒன்றும் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ்திங்கள் கிழமை (ஜூலை 15) துவங்கியது. அதில் அபிராமி, சேரன், மீரா மிதுன், மோகன் வைத்யா, சரவணன் ஆகியோர் இந்த வார எலிமினிஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். அதில் மோகன் வைத்யா இந்த வாரம் வெளியேற்றபட்டதாக தகவலும் வெளியாகியுள்ளது.