என்னை இங்கு அனுப்பியதே விஜய் சேதுபதி தான்.! உருக்கமுடன் தெரிவித்த போட்டியாளர்.!

0
3217
Vijay-Sethupathi
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு லக்ஸரி பட்ஜெட்டிற்கான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் நேற்றைய டாஸ்கில் போட்டியாளர்களுக்கு மொட்டை கடுதாசி என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களை கேட்க விரும்பும் கேள்வியை கேட்கலாம் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

இந்த நிலையில் சேரனுக்கு சரவணன் எழுதிய மொட்டை கடுதாசியில் ‘நீங்கள் சினிமா துறையில் நுழைந்ததிலிருந்தே நல்ல பெயரும் புகழையும் விருதுகளையும் பெற்று விட்டீர்கள். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அதைவிடவா பெயரையும் புகழையும் பெற்று விட போகிறீர்கள். இது எதை நோக்கிய பயணம்’ என்று கேட்கப்பட்டிருந்தது.

இதையும் பாருங்க : உறுதியானது 17வது போட்டியாளர்.! இந்த தேதியில் வருகிறாராம்.! வெளியான ஆதாரம் இதோ.! 

- Advertisement -

இதற்கு பதில் கூறிய சேரன் சினிமா துறையில் நுழைந்ததிலிருந்தே நல்ல பெயரும், புகழும் கிடைத்தது உண்மை தான். ஆனால், சுலபமாக நான் பெறவில்லை அதே சமயம் அதனை காப்பாற்றவும் நான் போராடி வருகிறேன். ஆட்டோகிராப் தான் நான் பெற்ற கடைசி வெற்றி. அதன் பின்னர் மிகப்பெரிய போராட்டத்திற்கு மத்தியில் தான் என் சினிமா பயணம் நகர்ந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு வருமானம் ஒரு காரணமாக இருந்தாலும், எனக்கு மக்களுடன் இருக்கும் தொடர்பு 4 வருடங்களாக அறுந்து விட்டது, அதனை நான் பழக்க வேண்டும். மேலும், என்னை இங்கு போங்க என்று சொன்னதே விஜய் சேதுபதி தான். நீங்கள் 4 வருடங்கள் இடைவேளை விட்டுவிடீர்கள் உங்களை அடுத்த தலைமுறையினர் அறிய வேண்டும். நீங்கள் பட்ட அனுபவங்கள் எல்லாம் மற்றவர்களுக்கு உதவும் என்று என்னிடம் கூறினார். அதனால் தான் நான் இங்கு வந்தேன் என்று சேரன் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement