தன் சொந்த ஊரில் ஜாதிக் கலவரம், அப்பாவி மக்களை கட்டி வைத்து தாக்கிய கொடூரம் – நடவடிக்கை எடுக்கக்கோரி சேரன் கண்டனம்.

0
759
cheran
- Advertisement -

இயக்குனர் சேரனின் சொந்த ஊரில் நடந்த சாதி கலவரத்தினால் மக்கள் கொடூரமாக தாக்கப்பட்டு இருப்பதற்கு ஆர்எஸ்எஸ் தான் காரணம் என்ற தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி விடுகிறது. சில ஆண்டுகளாகவே கொரோனா தாக்கம் உலகம் முழுவதும் தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்த நிலையில் சில மாதங்களாக தான் கொரானாவின் பரவல் குறைந்து மக்கள் கொஞ்சம் நிம்மதியாக வெளியில் நடமாடுகிறார்கள். இதனால் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடி இருந்தார்கள். இந்த நிலையில் பொங்கல் பண்டிகை அன்று சில மாவட்டங்களில் அடுக்கடுக்காக எதிர்பாராதவிதமாக சாதிய பிரச்சனைகள் மிக மோசமாக தன்னுடைய கோர முகத்தைக் காட்டி இருக்கிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-88-494x1024.jpg

திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை போன்ற சில பகுதிகளில் ஜாதி பிரச்சினையை வைத்து தேவையில்லாமல் கலவரத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதில் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் பொங்கல் திருநாளை ஒட்டி ஒரு ஜாதி பிரச்சனை நடந்திருக்கிறது. மேலும், இந்த ஜாதிக் கலவரத்தை ஏற்படுத்திய கும்பல் ஆண்கள், பெண்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் கொடூரமாக தாக்கி இருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இந்த சம்பவ இடத்தில் இருந்த நபர் ஒருவர் நடந்ததைத் தெளிவாக கூறுகிறார்.

- Advertisement -

மதுரையில் நடந்த சாதி கலவரம்:

அதில் அவர் கூறியிருப்பது, மதுரையில் ஒன்றல்ல இதே மாதிரி மூன்று நிகழ்வுகள் நடந்து இருக்கிறது. இது எதேச்சையாக நடந்தது என்று சொல்லமுடியாது. திட்டமிட்டு நடந்த ஒன்று. அதிலும் குறிப்பாக ஆர் எஸ் எஸ் பின்புலத்தோடு இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. பொங்கல் பண்டிகை அன்று மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் பழையூர் பட்டியில் இந்த கலவரம் நடந்தது. இது மொத்தமாக வெள்ளலூர் நாடு என்று சொல்வார்கள். இது இயக்குனர் சேரன் உடைய சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊரில் ஆரம்ப காலகட்டத்தில் எந்த ஒரு ஜாதி மத வேறுபாடு எதுவும் இல்லாமல் மக்கள் அனைவரும் ஒன்றாக தான் வாழ்ந்திருந்தார்கள்.

வைரலாகும் வீடியோ:

அங்கு இருக்கும் மக்கள் கடவுளுக்கு மட்டும் தான் பயந்து வாழ்ந்து வந்தார்கள். மற்றபடி ஜாதி கொடுமைகள், வன்முறைகள் என்று எதுவும் கிடையாது. ஆனால், தற்போது பொங்கல் பண்டிகை அன்று அங்கிருக்கிற ஆதிதிராவிடர்கள் பொங்கல் விழாவை கொண்டாடி இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய கொடியை ஏற்றியும், அதற்கான புகைப்படங்கள் எல்லாம் வைத்திருந்தார்கள். அதை பிடிக்காத அங்கு இருந்த கயவர்கள் திட்டமிட்டு ஒரு தம்பியை பிடித்து கட்டிவைத்து கொடுமையாகத் தாக்கினார்கள். இதைக் கேட்கப் போன இரண்டு ஆண்களையுமே கட்டி வைத்து அடித்து உள்ளார்கள். இதற்கு பயந்து ஆண்கள் யாரும் போகாமல் பெண்கள் போய் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அதிரடி நடவடிக்கை எடுத்த போலீஸ்:

ஆனால், அந்த சாதி வெறியர்கள் பெண்கள் கூட என்று கூட பார்க்காமல் அவர்களையும் ரத்தம் வருமளவிற்கு கொடூரமாக அடித்து இருக்கிறார்கள். பின் இதை போலீசிடம் தகவல் சொல்லி இருக்கிறார்கள். போலீசும் நடவடிக்கை எடுத்தார்கள். ஆனால், இதில் என்ன ஒரு கொடுமை என்றால் அடி வாங்கி பாதிக்கப்பட்டவர்களை போலீசார் கைது செய்து இருக்கிறது. ஜாதி கொடுமைகளை ஏற்படுத்தியவர்களில் இரண்டு பேரை மட்டும் கைது செய்திருக்கிறார்கள். மேலும், இந்தப் பிரச்சினையை குறித்து விசாரிக்க போனவர்கள் அனைவரையுமே சாதிவெறியர்கள் அடித்து துரத்தினார்கள். இதற்கு முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ் தூண்டுதலின் படி தான் நடந்தது என்பது தெரிய வந்தது.

சாதி கலவரத்திற்கு RSS தான் காரணம்:

அதேபோல் கடந்த வாரம் கோயம்புத்தூரிலும் ஆர்எஸ்எஸ் பயங்கர கலவரத்தை ஏற்படுத்தி இருந்தார்கள். இதற்கெல்லாம் முக்கிய காரணம் இப்படி எல்லாம் ஆங்காங்கே கலவரத்தை ஏற்படுத்தினால் தான் நம்முடைய கட்சியை விரிவுபடுத்த முடியும் என்றும் மக்கள் மத்தியில் பிரபலமாகலாம் என்ற நோக்கில் தான்RSS கட்சி தமிழகத்தில் ஆங்காங்கே பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து சோசியல் மீடியாவில் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சேரனின் டீவ்ட்:

இந்நிலையில் இயக்குனர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது, இத்தனை வருடங்களில் இல்லாத நிகழ்வு என் கிராமத்தில் நடந்திருப்பது மனதை புண்படுத்துகிறது. அங்கே எல்லோரும் இதுவரை தாய் பிள்ளையாக எந்த ஒரு ஜாதி வேறுபாடு இன்றி ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள். சில விஷ கிருமிகள் புகுந்து அந்த ஒற்றுமையை வேர் அறுக்க முயல்வதை தடுக்கவேண்டும். மேலும், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியதும் கட்டிவைத்து அடித்ததும் கண்டனத்திற்குரியது. எங்கள் கிராமப் பெரியவர்கள் மற்றும் காவல்துறையினர் சரியான விசாரணை நடத்தி நீதி காண வேண்டும். நம் மண்ணில் இனி இதுபோல் ஒன்று நடக்கக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது ஆறுதல்கள் என்று பதிவிட்டிருக்கிறார். இவரின் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement