தமிழகர்களை தீவீரவாதிகளாக காட்டும் இந்த தொடரை புறக்கணிக்க வேண்டும் – சீமானுக்கு ஆதரவாக பிக் பாஸ் 3 நடிகர்.

0
949
- Advertisement -

தி பேமிலி மேன் வெப் தொடரின் முதல் சீசன் கடந்த 2019 ஆம் ஆண்டு அமேசான் பிரைமில் வெளியாகி இருந்தது. ராஜ், டிகே ஆகியோர் இயக்கி இருந்த இந்த வெப் தொடரில் இதில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, நீரஜ் மாதவ், சந்தீப் கிஷன் போன்ற ரசிகர்களுக்கு பரிட்சயமான நடிகர்கள் நடித்து இருந்தனர். இன்வெஸ்டிகேடிவ் க்ரைம் த்ரில்லராக இந்த தொடர் உருவாகி இருந்தது. மேலும், ரசிகர்கள் மத்தியில் இந்த வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த தொடரின் இரண்டாம் சீசன் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி இருக்கிறது. இந்த தொடரின் ட்ரைலர் வெளியான போதே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தொடரில் சமந்தா இலங்கையில் இருந்து வந்த தீவிரவாதிதான் சமந்தா என்றும், ,மனோஜ் பாஜ்பாயி அவரை பிடிக்கும் என்ஐஏ அதிகாரியாகவும் கதை அமைக்கப்பட்டு இருந்தது.

- Advertisement -

இந்த ட்ரைலரில் நான் எல்லோரையும் கொல்ல வேண்டும் என்று சமந்தா தமிழில் பேசுவதாகவும் காட்டி இருக்கிறார்கள். இந்த ட்ரைலரை பார்த்த பலர் தமிழகர்களை தீவீரவாதிகளாக காட்டும் இந்த தொடரை புறக்கணிக்க வேண்டும் என்றும் எதிர்ப்புகள் எழுந்தது. இதற்கு எல்லாம் மேலாக தமிழக அரசும் இந்த படத்தை வெளியிட கூடாது என்று கடிதம் அனுப்பியது. இருப்பினும் பல சர்ச்சைக்கு மத்தியில் இந்த படம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.

அதே போல நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட இந்த தொடர் வெளியாக கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். இப்படி ஒரு நிலையில் சீமானின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ள சேரன், தமிழ் இனத்தின் விடுதலைக்கு போராடிய இயக்கத்தின் வரலாறை கொச்சைப்படுத்தி தவறாக சித்தரிக்கும் இந்த வெப்தொடரை புறக்கணிக்கிறேன். இந்த தொடரை உடனே நிறுத்தவும். நிறுத்தும்வரை அமேசான் ஃபிரைம் சந்தாதாரராக இருக்கவோ இணையவோ போவதில்லை.

-விளம்பரம்-

உலகத்தமிழர்களின் கவனத்திற்கு.. தமிழர்கள் மீது சூழ்ச்சிவாதிகள் சுமத்த முனையும் இதுபோன்ற செயல்களை முன்னரே களையாவிட்டால் உலக நாடுகள் முன் நம் சந்ததிகள் அவமானம் கொள்ள நேரிடும் என்று பதிவிட்டுள்ள சேரன் இந்த தொடரை வெளியிட்ட அமேசான் பிரேமில் இருந்தும் Unsubscribe செய்துள்ளதாக கூறியுள்ளார்.

Advertisement