மறைந்த லாஸ்லியாவின் தந்தை குறித்து சேரப்பா போட்ட உருக்கமான பதிவு.

0
3446
cheran
- Advertisement -

முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்துள்ள சம்பவம் லாஸ்லியா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் முகேன், தர்ஷன், லாஸ்லியா என்று ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அதில் மிகவும் பிரபலமடைந்தது என்னவோ லாஸ்லியா தான். இலங்கை செய்தி வாசிப்பாளரான இவர் பிக்பாஸ் வீட்டில் கலந்துகொண்ட 24 மணி நேரத்திலேயே இவருக்கென்று பல ஆர்மி கூட துவங்கப்பட்டது கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவிஞர் மற்றும் லாஸ்லியாவின் காதல் தான் மிகவும் லைட் ஆக இருந்து வந்தது.

-விளம்பரம்-
Image

கவின் லாஸ்லியா இருவரும் பிக் பாஸ் வீட்டில் காதலிதது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் ஆனால் இருவருமே தங்கள் காதலை வெளிபடையாக கூறவில்லை எது வேண்டுமானாலும் வெளியில் சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று கவின் அடிக்கடி கூறி வந்தார். இப்படி ஒரு நிலையில் தான் கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியாவின் தந்தை உள்ளே வந்தது தான் பூகம்பமாக வெடித்தது . கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் freeze டாஸ்க்கின் போது லாஸ்லியாவை சந்திக்க அவரது தந்தை பிக் பாஸ் வீட்டிற்குள்சென்று இருந்தார். 10 வருடங்கள் கழித்து தனது தந்தையை கண்ட சந்தோசத்தில் லாஸ்லியா கண்ணீர் விட்டு அழுதார் லாஸ்லியா.

- Advertisement -

ஆனால், ககவின் விஷயத்தில் லாஸ்லியா நடந்து கொண்ட விதத்தால் கடுப்பான லாஸ்லியாவின் தந்தை, இதற்காகவா உன்னை அனுப்பினேன். என்னை அனைவரும் காரிதுப்பும்படி செய்துவிட்டாய் என்று கடுமையாக பேசி இருந்தார். ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் விளையாடுங்கள் என்று அறிவுரை கூறி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் லாஸ்லியாவின் தந்தை.லாஸ்லியாவின் தந்தை பிக் பாஸ் வீட்டில் நுழைந்த போது பலரும் அவர் சேரனை போலவே இருக்கிறார் என்று கூறினர். அதே போல லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியா சேரனை சேர்ப்பா என்று தான் அழைத்து வந்தார்.

மேலும், லாஸ்லியாவின் தந்தையும் சேரனிடம் நன்றாக பேசிவிட்டு தான் சென்றார். இப்படி ஒரு நிலையில் லாஸ்லியாவின் தந்தை மறைவு குறித்து சேரன் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், லாஸ்லியா.. தந்தையின் மேல் எத்தனை அன்பும், கனவும் வைத்திருந்தாய் என்பது நன்றாக தெரியும். இந்த செய்தி என்னையே உலுக்குகிறது. எப்படித்தாங்குவாய் மகளே. சொல்ல முடியாத துயரில் துடிக்கும் உனக்கும் குடும்பத்துக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement