19 ஆண்டுகள் கழித்து ‘பாண்டவர் பூமி’ படம் குறித்து பேசிய அருண் விஜய் மற்றும் சேரன். காரணம் இதுதான்.

0
4490
cheran
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் சேரனும் ஒருவர். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். அந்த வகையில் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. வசூல் சாதனை பெற்றது என்றும் சொல்லலாம். இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடல் தேசிய விருது பெற்றது. சேரன் அவர்கள் இயக்கிய பல படங்களுக்காக தேசிய விருதுகளை வாங்கி உள்ளார்.

-விளம்பரம்-

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சேரன் அவர்கள் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஹீரோவாக நடித்து உள்ளார். இந்த படத்தை சாய் ராஜ்குமார் இயக்கி இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இதையும் பாருங்க : நண்பர்களுடன் காரில் சொந்த ஊர் சென்ற 22 வயது நடிகை. கோர விபத்தில் மரணம்.

- Advertisement -

சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் சேரன் இயக்கத்தில் வெளியான ‘பாண்டவர் பூமி திரைப்படம் ஒளிபரப்பானது. இந்த நிலையில் இந்த படத்தின் நினைவுகள் குறித்து இயக்குனர் சேரன் அருண் விஜய்க்கு ட்வீட் ஒன்றை செய்திருந்தார். அதில் இன்று பாண்டவர் பூமி சன் தொலைக்காட்சியில். உங்கள் பெயரை இந்த சினிமா உச்சரிக்க ஆரம்பித்த முதல் படம் என நினைக்கிறேன்.

உங்கள் தன்னம்பிக்கையும் முயற்சியுமே உங்கள் பலம்.. இன்னும் நெடுந்தூரம் போங்கள். பார்த்து ரசிக்கிறேன். நீங்கள் கடந்த பாண்டவர் பூமி எனும் மைல்கல்லில் அமர்ந்தபடி. நன்றி என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதில் தெரிவித்த அருண் விஜய்,என்றும் என் நினைவில் மறவாத ஒரு மைல்கல்- பாண்டவர் பூமி. அதன் மூலம் பல நுணுக்கங்களை எனக்குக் கற்றுக்கொடுத்தவர் நீங்கள். நேற்றுதான் படப்பிடிப்பு நிறைவு பெற்றது போல் உள்ளது. உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி. செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது என்று கூறியுள்ளார் அருண் விஜய்.

-விளம்பரம்-

Advertisement