நண்பர்களுடன் காரில் சொந்த சென்ற 22 வயது நடிகை. கோர விபத்தில் மரணம்.

0
2068
- Advertisement -

கன்னட சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் மெபினா மைக்கேல். இவர் மாடலாக தனது கலையுலக வாழ்வைத் துவங்கினார். பின்னர் மெபினா மைக்கேல் அவர்கள் சின்னத்திரை தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். பிறகு இவர் பியாட்டே ஹுதுஹிர் ஹள்ளி லைப் என்ற கன்னட ரியாலிட்டி ஷோ மூலம் புகழின் உச்சத்துக்குச் சென்றார். மெபினா மைக்கேல் கர்நாடக மாநிலம் மடிக்கேரி பகுதியை சேர்ந்தவர். தற்போது இவருக்கு 22 வயது தான் ஆகிறது.

-விளம்பரம்-
Reality show winner Mebiena Michael dies in a road accident ...

இந்நிலையில் நடிகை மெபினா மைக்கேல் அவர்கள் தன்னுடைய சொந்த ஊர் செல்லும்போது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளார். தற்போது இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா காரணமாக லாக்டவுன் போடப்பட்டு உள்ளது. இதனால் பல பேர் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை மெபினா மைக்கேல் அவர்கள் தன்னுடைய சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பெங்களூருவில் வசித்து வந்தார்.

- Advertisement -

பின் கடந்த செவ்வாய்கிழமை மாலை பெங்களூருவில் இருந்து நடிகை மெபினா தனது தோழிகளுடன் சொந்த ஊரான மடிக்கேரிக்கு காரில் சென்றுள்ளார். தேவிஹள்ளி பகுதி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக அவர் சென்ற கார் எதிரே வந்த டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த அனைவரும் பலத்த காயமடைந்தனர்.

Kannada TV actress Mebeina Michael, 22, dies in a road accident ...

பிறகு இவர்கள் அனைவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் நடிகை மெபினா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது தோழிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகை மெபினா மைக்கேல் இறந்த சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

-விளம்பரம்-
Advertisement