தமிழில் பிரபல இயக்குனரும் நடிகருமான சேரன் தற்போது ‘ஆனந்தம் விளையாடும் வீடு ‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். குடும்பங்களை மையமாக வைத்து, உருவாகி உள்ள இப்படத்தை இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கி உள்ளார். இப்படத்தை பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளார். தமிழில் பல்வேறு படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நந்தா பெரியசாமி ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி, வண்ண ஜிகினா போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.
தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக மீண்டும் களம் இறங்கியிருக்கிறார் நந்தா பெரியசாமி. இந்தப் படத்தில் சேரன் கௌதம் கார்த்திக் சரவணன் டேனியல் பாலாஜி வெண்பா மொட்டை ராஜேந்திரன் சிங்கம்புலி கும்கி படம் நடிகர் ஜோ மல்லூரி பிக்பாஸ் சினேகன் சௌந்தர்ராஜன் மைனா பருத்திவீரன் புகழ் சுஜாதா, நக்கலைட்ஸ் தனம் என பெரும் நடச்சத்திர பட்டாளமே நடித்து உள்ளனர்.
இதையும் பாருங்க :” கமுக்கமாக காதல், விஜய் டிவி சீரியல் நடிகருடன் நிச்சயதார்தத்தையே முடித்த செம்பருத்தி ஷபானா. இதோ புகைப்படம்.
சித்து குமார் இசையமைக்கும் இப்படத்துக்கு போரா பரணி ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்களை சினேகன் எழுதி உள்ளார். சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகர் சேரன் முதல் மாடி உயரத்தில் இருந்து கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அதுவும் 8 தையல் போடும் அளவிற்கு அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், காயத்தை பொருட்படுத்தாமல் சேரன் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டு பலரையும் நெகிழ வைத்துள்ளார். சேரனின் இந்த அர்ப்பணிப்பை பலரும் பாராட்டியுள்ளனர்.