கமுக்கமாக காதல், விஜய் டிவி சீரியல் நடிகருடன் நிச்சயதார்தத்தையே முடித்த செம்பருத்தி ஷபானா. இதோ புகைப்படம்.

0
10480
shabana
- Advertisement -

செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா ரகசிய நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளார். வெள்ளி திரையை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை ரசிப்பவர்கள் தான் அதிகம் உள்ளனர். அந்த வகையில் மக்களிடையே அதிக ஆதரவும்,அன்பும் பெற்ற சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் தான். இப்போது இருக்கும் டாப் சீரியல்களில் ஒன்றாக செம்பருத்தி சீரியல் உள்ளது. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

-விளம்பரம்-
zee tamil Sembaruthi Serial Shabana in love with vijay tv Baakiyalakshmi serial Aryan

இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடர் ஆகும். இந்த தொடர் தெலுங்கு மொழியில் ‘முத்த மந்தாரம்’ என்ற தொடரின் கதை அம்சத்தை தழுவி எடுக்கப்பட்டது ஆகும். இந்த தொடரில் ஆபீஸ் சீரியல் நடிகர் கார்த்தி நடித்து வந்த நிலையில் சமீபத்தில் அவர் இந்த சீரியலில் இருந்து விலகினார்.

இதையும் பாருங்க : ரஞ்சித் 17 முறை கால் செய்தும் எடுக்காமல் இருந்துள்ள சார்பட்டா நடிகை – என்ன காரணம் பாருங்களேன்.

- Advertisement -

மேலும், இந்த சீரியலில் நாயகியாக ஷபானா நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் ஷாபனாவிற்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யானுக்கும் திடீர் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் ஆர்யானும் ஷபானாவும் காதலித்து வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நடிகர் ஆர்யன், இருவரும் கையில் மோதிரம் அணிந்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, அவளது உயிரின் மேல் காதல் வயப்பட்ட காரணம் இருவரது புற அழகு ஒரு நாள் காணாமல் போகும். ஆனால், உயிர் அப்படியே இருக்கும். அங்கு தான் காதல் வாழும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு ஷபானா ‘என்னை எப்பொழுதும் நீங்கள் ஆச்சரியப்பட வைக்க தவறியதில்லை’ என்று கமெண்ட் செய்திருக்கிறார். இந்த பதிவில் ரசிகர் ஒருவர் திருமணம் எப்போது என்று கேட்க அதற்கு சொல்கிறோம் என்று பதில் கூறியுள்ளார் .

-விளம்பரம்-
Advertisement