நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள ‘தவமாய் தவமிருந்து’ பட நடிகை பத்மபிரியா.

0
3723
padma
- Advertisement -

தமிழில் தவமாய் தவமிருந்து என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பத்மப்ரியா. டெல்லியை பூர்வீகமாக கொண்ட இவர் ஆரம்ப காலத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அதன் பின்னர் மாடலிங்கில் ஈடுபட்ட இவர் 2001 ஆம் ஆண்டிற்கான மிஸ் ஆந்திரா பிரதேஷ் என்ற அழகிய பட்டத்தையும் வென்றார்.தெலுங்கில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான சீனு வசந்தி லட்சுமி என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் ,அதன் பின்னர் பல்வேறு மலையாள படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

தமிழில் இதுவரை தவமாய் தவமிருந்து, பட்டியல், சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் அறிமுகமான தவமாய் தவமிருந்து என்ற படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை என்ற ஃபிலிம்ஃபேர் விருதினையும் பெற்றுள்ளார். திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாக பத்மபிரியா ஒரு சில விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார்.

- Advertisement -

மேலும், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் சீசன் 5 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். பத்மபிரியா இயக்கிய குறும்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது இருப்பினும் அவரால் அந்த நிகழ்ச்சியில் பட்டத்தை வெல்ல முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பத்மபிரியா கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பத்மபிரியா நியூயார்க் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிக்கும் போது ஜாஸ்மினை சந்தித்தார் பின்னர் ஒருவரை ஒருவர் பிடித்துப்போக திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வரும் இவர் தற்போது விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவர் திருமணத்திற்கு முன்னர் நடத்திய கவர்ச்சியான போட்டோ ஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement