இன்றைய டாஸ்கில் தோற்கப்போகிறார் சேரன்.! ப்ரோமோவில் இதை கவனிச்சிருக்க மாடீங்க.!

0
7386
cheran-task
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் நான்கு வாரமே இருக்கிறது. இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்பதற்கான சுவாரசியம் கூடி வருகிறது. ஆனால் ,இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த ஒரு கடுமையானடாஸ்க்கும் வைக்கப்படவில்லை. இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற போகும் நிலையில் யார் வெற்றி பெறப் போவது என்ற மிகப்பெரிய கேள்வியும் எழுந்துள்ளது.

-விளம்பரம்-

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் போட்டியாளர்களுக்கு சவாலான டாஸ்க்கும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே அதாவது இறுதி போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க் இந்த வாரம் முழுவதும் நடைபெற இருக்கிறது. இந்த வாரத்தின் இறுதியில் அதிக மதிப்பெண்களை பெரும் போட்டியாளருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்படும்.

- Advertisement -

எனவே, இந்த டாஸ்கில் வெற்றிபெற போட்டியாளர்கள் அனைவரும் கடுமையாக போராடி வருகின்றனர். இதுவரை நடந்து முடிந்த டாஸ்கில் தர்ஷன் தான் முன்னிலையில் இருக்கிறார். நிலையில் இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் அவரவர் முகம் அடங்கிய துண்டுகளை சரியாக அடுக்க என்று டாஸ்க் கொடுக்கப்பட்டது.

மேலும், அதனை மற்ற போட்டியாளர்கள் பந்தை எரிந்து கலைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த டாஸ்கின் போது சேரன் தனது அடுக்கை கலைக்க விடமால் பத்திரமாக பார்த்துக்கொண்டு இருந்தார். இதனால் சேரன் இந்த போட்டியில் வெற்றி பெருவாரோ என்று எண்ணம் தோன்றியது. ஆனால், சரியாக கவனித்ததில் சேரன் இரண்டு துண்டுகளை சரியாக பொருந்தாமல் இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. ஒருவேளை சேரன் இதனை கவனிக்காமல் இருந்தால் அவர் நிச்சயம் இந்த டாஸ்கில் தோற்றிருப்பார் என்பது மட்டும் உறுதி.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement