90ஸ் குழந்தைகளின் பேவரைட் சீரியல் கனா காணும் காலங்கள். இந்த சீரியல் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளை அதிகம் கவர்ந்தது. இது மிகப்பெரிய நெடுந்தொடர் சீரியல் ஆகும். இந்த சீரியலில் ஹீரோவாக நடித்தவர் இர்பான். இவருக்கு முதல் சீசன் போல் இரண்டாவது சீசன் அமையவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இதனை தொடர்ந்து இர்பான் ‘சரவணன் மீனாட்சி ‘ தொடரில் சரவணனாக நடித்து மத்தியில் பிரபலமடைந்தவர். பின்னர் இவர் ஜோடி நிகழ்ச்சியில் கூட பங்கு பெற்றார். பிறகு இர்பான் அவர்கள் சீரியலை விட்டு விட்டு சினிமாவுக்கு வந்து விட்டார்.
இதற்கு பின்னர் இவர் பட்டாளம், எதிர் வீடு, ரூ, பொங்கி எழு மனோகரா போன்ற சில படங்களில் நடித்து வந்தார். இதில் எந்த படமும் அவருக்கு பெரிதாக அமையவில்லை. ஆனாலும் சுண்ணாட்டம் படம் தான் அவருக்கு ஓரளவிற்கு சொல்லும் படியாக அமைந்தது. சினிமாவில் பிரபலமான இயக்குனரும், நடிகருமான சேரன் இயக்கத்தில் வெளிவந்த படம் “ராஜாவுக்கு செக்”. சேரன் அவர்கள் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு இயக்கி நடித்து உள்ள படம் ராஜாவுக்குச் செக். இந்த படத்தில் சேரன் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சராயூ மோகன் நடித்து உள்ளார்.
இதையும் பாருங்க : எனக்கு மகனாக நடிக்க அவங்க பொருத்தமா இருபாங்களானு பாருங்க. ராதிகாவின் பதிலால் கடுப்பான அஜித் ரசிகர்கள்.
இந்த படத்தில் நடிகர் இர்பான் அவர்கள் வில்லனாக நடித்து உள்ளார். ஹீரோ போல நடித்து வந்த இர்ஃபான் தற்போது வில்லனாக மாறியுள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ‘ராஜாவுக்கு செக்’ படத்தை பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளார்கள். படத்தில் முக்கிய வேடத்தில் சிருஷ்டி டாங்கே, வர்மா ஆகியோர் நடித்து உள்ளார்கள். ஜெயம் ரவியின் ‘மழை’ படத்தை இயக்கிய சாய்ராஜ் குமார் அவர்கள் தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு இசை அமைத்து உள்ளது தெலுங்கில் பிரபலமான இசையமைப்பாளர் வினோத்ய ஜமானியா.
இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழில் அறிமுகமாகிறார். இதனைத் தொடர்ந்து படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் எம்.எஸ் பிரபு. இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளை டேஞ்சர் மணி என்பவர் தான் கையாண்டு உள்ளார். இந்த படம் எமோஷனல், திரில்லர், ஆக்ஷன், காமெடி என பல கலவைகளை கொண்ட காமெடி படம் ஆகும். இந்த படம் திரை அரங்கில் வெளிவாகி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை படம் பார்த்தவர்கள் டுவிட்டரில் நடிகர் இரபானுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதோடு நடிகர் இர்பானை வாழ்த்து மழையில் நனைய வைத்து உள்ளார்கள். இந்த படத்தில் இர்பான் நடிப்பு பாராட்டுக்குரிய வகையில் உள்ளது என்றும் கூறி இருக்கிறார்கள்.