திடீல்னு அத ரெடி பண்ண சொன்னாரு. அது கோபமா மாறிடிச்சி கமல் படத்தில் இருந்து விலகிய காரணத்தை சொன்ன சேரன்.

0
80027
cheran
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இயக்குனர் சேரன். பின்னர் ஹீரோவாகவும் அவரதராம் எடுத்தார். சமீப காலமாக இவருடைய படங்கள் தோல்வி அடைந்ததால் சிறிது காலம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். சில காலங்களுக்கு பிறகு சேரன் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். பொதுவாகவே பிக்பாஸ் வீட்டில் வயதில் அதிகம் உள்ளவர்கள் கலந்து கொண்டால் 50 நாட்களுக்குள்ளேயே எலிமினேட் செய்யப்படுவார்கள். ஆனால், சேரனின் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் தான் 90 நாட்கள் வரை பயணம் செய்ய காரணமாக இருந்தது என்று கூட கூறலாம். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சேரன் மீண்டும் மக்கள் மனதில் இடம் பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சேரன் அவர்கள் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஹீரோவாக நடித்து உள்ளார். இந்த படத்தில் சேரனுக்கு ஜோடியாக சராயூ நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

இவர்களை தவிர இந்த படத்தில் கனா காணும் காலங்கள் இர்பான் வில்லனாக நடித்து உள்ளார். மேலும்,1993 ஆம் ஆண்டு சந்தானபாரதி இயக்கத்தில் வெளிவந்த படம் தான் மகாநதி. இந்த படத்தில் துணை இயக்குனராக சேரன் பணி புரிந்திருந்தார். இந்த படத்தில் கமலஹாசன், சுகன்யா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்நிலையில் இந்த படத்தின் போது கமல்ஹாசனுக்கும், இயக்குனர் சேரனுக்கு மிகப் பெரிய சண்டை நடந்து படப்பிடிப்பு தளத்திலிருந்து சேரன் வெளியே சென்று விட்டார் என்று பல கருத்துக்கள் வந்தது. தற்போது இது குறித்து அதற்கான விளக்கத்தை இயக்குனர் சேரன் அவர்கள் பேட்டியில் கூறி உள்ளார். அதில் அவர் கூறியது, கமலஹாசன் மீதி இருக்கிற நம்பிக்கை, அவருடைய நடிப்பு, திறமையை வைத்து எப்படியாவது ஒரு படம் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை.

- Advertisement -

அப்படி தான் மகாநதி படம் தொடங்கியது. மகாநதி படம் தொடங்கி ஒரு அறுபது நாளில் கமல்ஹாசனுடன் சண்டை போட்டு கொண்டு நாங்க ஒரு நான்கு அசிஸ்டன்ட் இயக்குனர்கள் வந்துட்டோம். அது அறியாமையில் நடந்த சண்டை என்று தான் சொல்லணும். ஒருநாள் மகாநிதி சூட்டிங் மவுண்ட் ரோட்டில் நடந்தது. அப்போது மழை பொய்த்தும், வெயில் அடித்தும் கொண்டு இருந்தது. பொதுவாகவே மழை, வெயில் இரண்டும் ஒரே நேரத்தில் வரும் போது தான் வானவில் தோன்றும். இதை பார்த்த கமல் சார் உடனே ஷாட் ரெடி,கேமரா எங்கே என்று பேசிட்டு இருந்தார். வானவில் போகுது சீக்கிரம் வாங்க கேமரா எடுத்துட்டு வாங்க கோபமாக சொல்லிட்டு இருந்தார். அப்பன்னு பார்த்து கேமரா மேன் மழை பெய்து என்று கேமராவை வண்டியில் கொண்டு போய் வைத்து கொண்டார்.

வீடியோவில் 16 நிமிடத்திற்கு பின் பார்க்கவும்

-விளம்பரம்-

அப்புறம் நான் ஓடிப்போய் கேமராவை எடுத்து வந்தேன். ஏன்னா, வண்டி ரொம்ப தூரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நான் கேமரா கொண்டு வரதுக்குள்ளேயே மழை நின்று வானவில்லும் போய் விட்டது. உடனே கமல் சாருக்கு கோபம் வந்து எங்களை திட்ட ஆரம்பித்துட்டாரு. இயக்குனராக இருந்து ஒரு ஷாட் எடுக்க முடியல என்று பயங்கரமாக திட்டினாரு. உடனே எங்களுக்கு கோவம் வந்துச்சு. கேமராவை கொண்டு வரத்துக்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் எங்களுக்கு தான் தெரியும். எங்களை எதுவுமே கேட்காமல் திட்டினாரே என்று எங்களுக்கும் கோபம் வந்தது. பின் எனக்கு மேல் இருந்த இயக்குனரும் தூக்கி போட்டு போயிட்டாரு. அவரே போய் விடும் போது நானும் தூக்கி போட்டு நாங்க மொத்தம் நாலு இயக்குனர்களும் போயிட்டோம். அதற்கு பிறகு தான் நான் இயக்குனராக இருக்கும் போது புரிந்தது என்று புன்னகை உடன் கூறினார்.

Advertisement