‘ஞாபகம் வருதே’ – ஆட்டோகிராப் பட டிக்கெட் புகைப்படத்தை பதிவிட்ட ரசிகர் – டிக்கெட்டின் கதை சொன்ன சேரன்.

0
5007
cheran
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் சேரனும் ஒருவர். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். அந்த வகையில் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. வசூல் சாதனை பெற்றது என்றும் சொல்லலாம். இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடல் தேசிய விருது பெற்றது. சேரன் அவர்கள் இயக்கிய பல படங்களுக்காக தேசிய விருதுகளை வாங்கி உள்ளார்.

-விளம்பரம்-

தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்த சேரன், ஹீரோவான பின்னர் சினிமாவில் மிகப்பெரிய சாறுக்களை கண்டார். பொக்கிஷம் படத்திற்கு பின்னர் சேரன், 6 வருடங்கள் இயக்குனர் சேரில் இருந்து கொஞ்சம் ஒய்வு எடுத்தார். அதன் பின்னரும் நடிகராக நடித்து வந்த சேரன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்குனராக அவதாரமெடுத்தார்.

- Advertisement -

ஆனால், சேரனால் இன்றைய தலைமுறையினர் ரசிக்கும்படியான படங்களை கொடுக்க முடியவில்லை. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சேரன் அவர்கள் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஹீரோவாக நடித்துஇருந்தார்.இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்த நிலையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர், சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படத்தின் டிக்கெட்டின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இதனை கண்டு மகிழ்ச்சியடைந்த சேரன், இந்த டிக்கேட்டின் கதை முதலில் தேவிகலாவில்( சிறிய தியேட்டர்) மட்டுமே திரையிட அனுமதி கிடைத்தது. இரண்டாவது வாரம் தேவிபாலாவிலும் இடம் கிடைத்தது. மூன்றாவது வாரம் தேவிபாரடைஸ்( பெரிய தியேட்டர்)ம் சேர்ந்து மூன்றிலும் படம் ஓடியது.

-விளம்பரம்-

நான்காவது வாரம் முதல் தேவியிலும் திரையிட்டார்கள் நான்கு திரையரங்கிலும் ஆட்டோகிராஃப் மட்டுமே மூன்றுவாரங்கள் ஓடியது.. பின்னர் ஒவ்வொன்றாக குறைத்து 100 நாட்களுக்கு மேல் ஓடியது.. சிட்டியில் ஆட்டோகிராஃப் திரையிட்ட நிறைய திரையரங்கங்கள் இதே முறையை பின்பற்றினார்கள்.. அது ஒரு மறக்கமுடியாத சம்பவம் என் வாழ்வில் என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

Advertisement