7 வருடம் கழித்து சன் டிவிக்கு நன்றி தெரிவித்து மீம் மெட்டிரியலாக மாறிய சேரன் – மீம் குறித்து அவரே போட்ட பதிவு.

0
52858
cheran
- Advertisement -

7 ஆண்டுகள் கழித்து சன் டிவி சொன்ன வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து பின்னர் அந்த பதிவையும் நீக்கியுள்ளார் சேரனை பலரும் கலாய்த்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் சேரனும் ஒருவர். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். அந்த வகையில் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-139-1024x948.jpg

வசூல் சாதனை பெற்றது என்றும் சொல்லலாம். இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடல் தேசிய விருது பெற்றது. சேரன் அவர்கள் இயக்கிய பல படங்களுக்காக தேசிய விருதுகளை வாங்கி உள்ளார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சேரன் அவர்கள் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஹீரோவாக நடித்து இருந்தார்.

- Advertisement -

இந்த படத்தை சாய் ராஜ்குமார் இயக்கி இருந்தார்.இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இயக்குனர் சேரன் 1970 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி தான். சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளும் டிசம்பர் 12 தான் என்பது சிறப்பு. இப்படி ஒரு நிலையில் சன் டிவியின் ட்விட்டர் பக்கம் சேரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ட்வீட் ஒன்றுக்கு சமீபத்தில் சேரன் நன்றி தெரிவித்தார்.

என்னடா இது, சேரன் போன வருஷம் சொன்ன வாழ்த்துக்கு இப்போ நன்றி தெரிவிக்கிறார் என்று பார்த்தால், அது சன் டிவி ட்விட்டர் பக்கம் சார்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு தெரிவித்த வாழ்த்து அது. கிட்டத்தட்ட 7 வருடங்கள் கழித்து சேரன் இதற்க்கு நன்றி தெரிவித்து ‘மிக்க நன்றி தாமதமாகத்தான் பார்க்க நேர்ந்தது’ என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்து சிலர் கலாய்க்க, அந்த பதிவையே நீக்கி விட்டார் சேரன்.

-விளம்பரம்-

இருப்பினும் அந்த ஸ்க்ரீன் ஷாட் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதனால் சேரனை கேலி செய்து பலவிதமான மீம்களும் சமூக வலைதளத்தில் வைரலானது. இப்படி ஒரு நிலையில் அதன் ஒரு மீமை பகிர்ந்த சேரன், ஆஹா… சிக்கிட்டமா… சரி.. என்ஞாய் பண்ணுவோம்.. என்று கமன்ட் செய்தார். இதற்ககு ட்விட்டர் வாசி ஒருவர், இது உங்களுக்கு தேவையா ? என்று கேட்க, அதற்கு இதுல என்ன சார் இருக்கு.. பசங்க ஜாலியா விளையாடுறாங்க.. ரசிக்கலாமே.. நம்மளும் கொஞ்சம் கவனக்குறைவா இருந்திருக்கோம்ல என்று கூறியுள்ளார் சேரன்.

Advertisement