எப்ப பாத்தாலும் எனக்கு, நானேனு கர்வம் – பிக் பாஸில் கமலின் பேச்சை விமர்சித்த நபர் – பிக் பாஸ் 3 போட்டியாளர் கொடுத்த பதிலடி.

0
44558
aari

பிக் பாஸில் கடந்த வாரம் நடைபெற்ற கடந்து வந்த பாதை என்ற டாஸ்கின் போது நடிகர் ஆரி பேசுகையில் ‘நாகேஷ் திரையரங்கம் படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பில் இருந்தபோது தன்னுடைய அம்மா இறந்து விட்டதாக தகவல் வந்தது ஆனால்; எனக்காக படப்பிடிப்பில் பல லட்சம் செலவு செய்து தயாராக இருந்தார்கள்’ அதனால் நான் படப்பிடிப்பை முடித்துவிட்டு தான் என்னுடைய அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டேன்’ என்னுடைய அம்மா உயிரோடு இருந்திருந்தால் இது குறித்து அவர் பெருமைப்பட்டு தான் இருப்பார் அதனால்தான் அப்படி செய்தேன் என்று கூறியிருந்தார். இதனால் போட்டியாளர்கள் அனைவருமே கண்கலங்கி ஆரியை கட்டித்தழுவி ஆறுதல் கூறினார்கள்.

கடந்த வாரம் போட்டியாளர்களுடன் கமல் பேசும்போது ஆரியின் சோக கதையை நினைவு கூர்ந்து உங்களைப் போலவேதான் நானும் தாயின் மரணத்தின்போது படப்பிடிப்பை முடித்துவிட்டு தான் அவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டேன். எனவே கண்டிப்பாக என்னுடைய தாயும் பெருமைப்பட்டு தான் இருப்பார். எனவே நீங்களும் என்னை போல செய்திருக்கிறீர்கள், அதனை நினைத்து நீங்கள் பெருமை படுங்கள் என்று ஆறுதல் கூறி இருந்தார்.

- Advertisement -

கமலஹாசன் இந்த செயலை பாராட்டி ட்விட்டர்வாசி ஒருவர் ஒரு பதிவைப் போட்டிருந்தார் அதில் ‘ என்னைப்போல் ஒருவன்” கமலஹாசன் சார் கூறியதும் கண்கலங்கிய ஆரி. “உங்களை போலவே தாயின் மரணத்தின்போதும் படப்பிடிப்பை முடித்துக்கொடுத்துவிட்டுத்தான் வந்தேன்”என ஆரியை சமாதானப்படுத்தினார்.. சககலைஞனின் வலி தெரிந்தவர் என்று கூறி இருந்தார்.

அதற்கு மற்றொரு ட்விட்டர் வாசி ஒருவர், ஆனால் அடிக்கடி…”எனக்கே…நானே”எனக்கூறும் வார்த்தைகளில் கர்வம் விஞ்சி நிற்கிறது.கமல் பாலுவிடம் கற்காதது….தன்னடக்கம் என்று கூறி இருந்தார். இதற்கு பதில் அளித்த இயக்குனரும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சேரன், தன்னடக்கம் 20ல இருக்கனும் சார்.. 60ல இருக்கனும்னு அவசியம் இல்லை.. சில நேரங்கள்ல முன்னோடியா இருக்கவங்க நம்மை நடத்துபவர்களாக இருக்கனும்.. கமல் சாருக்கு எனக்ககே… நானேன்னு சொல்லிக்கிற அளவு வாழ்க்கை அனுபவம் இருக்கு சார்.. அதனால் சொல்லலாம் என்பது என் கருத்து என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement