வட்டிக்கு வாங்கி ஆபீஸ் எடுத்து அட்வான்ஸ் கொடுத்தேன். ஒரு நாள் டிலே ஆனதாள நடிக்க மாட்டான்னு சொல்லிட்டாரு.

0
146010
Vikram Cheran
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் சேரனும் ஒருவர். பின்னர் சேரன் ஹீரோவாகவும் களம் இறங்கினார். சில ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் சேரன் உடைய படங்கள் எல்லாம் தோல்வி அடைந்ததால் சிறிது காலம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். பிறகு சேரன் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். பொதுவாகவே பிக்பாஸ் வீட்டில் வயதில் அதிகம் உள்ளவர்கள் கலந்து கொண்டால் 50 நாட்களுக்குள்ளேயே எலிமினேட் செய்யப்படுவார்கள். ஆனால், சேரனின் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் தான் 90 நாட்கள் வரை பயணம் செய்ய காரணமாக இருந்தது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சேரன் அவர்கள் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஹீரோவாக நடித்து உள்ளார். இந்த படத்தில் சேரனுக்கு ஜோடியாக சராயூ நடித்து உள்ளார். இந்த படத்தில் நடிகர் இர்பான் அவர்கள் வில்லனாக நடித்து உள்ளார். மேலும், இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சேரன் அவர்கள் எழுதி, இயக்கி, தயாரித்து நடித்த ஆட்டோகிராப் படத்தில் முதலில் விக்ரம் தான் நடிப்பதாக இருந்தது என்ற சேரன் அவர்கள் பேட்டியில் கூறி உள்ளார். 2004 ஆம் ஆண்டு சேரன் எழுதி, இயக்கிய திரைப்படம் தான் ஆட்டோகிராப். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி கொடுத்தது.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்காக தேசிய விருதும் கிடைத்தது. இந்த படத்தில் சேரன், சினேகா, மல்லிகா, கனிகா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்நிலையில் சேரன் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியது, ஆட்டோகிராப் படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தது பிரபு தேவா தான். அவரிடம் கதை, அட்வான்ஸ் எல்லாம் ஓகே பண்ணி பேசியது. பிறகு அவருக்கு அட்வான்ஸ் கொடுக்க ஒரே நாள் தள்ளி போனதனால் அவர் படத்தில் நடிக்க மாட்டார் என்று சொன்னார். அதற்கு பிறகு தான் விக்ரம் பேசினோம். சேது படத்தில் இருந்து விக்ரமுக்கும் எனக்கும் நல்ல நட்பு. விக்ரமுக்கு என்னோட படத்தில் கமிட் ஆகும் போது தான் ஜெமினி படம் நடிக்க வாய்ப்பு வந்து விட்டது.

Image result for autograph cheran

-விளம்பரம்-

நான் அப்போது பாண்டவர் பூமி படம் எடுத்துட்டு இருந்தேன். அவரும் ஒரு கமர்சியல் படம் நடித்து வருகிறேன் என்று போனார். பார்த்தால் ஜெமினி படம் பெரிய ஹிட்டான உடனே விக்ரம் இந்த படம் வேண்டாம் என்று சொல்லி விட்டார். அதற்குப் பிறகு ஆட்டோகிராப் படத்தில் நடிக்க பல நடிகர்களிடம் போய்க் கேட்டு பார்த்தேன். இந்த படத்தில் நடிக்க ஒரு சில பேர் சரி என்று சொல்கிறார்கள். பின் வேணாம்ன்னு சொல்றாங்க. இந்த படம் எடுக்க பல பிரச்சினைகள் வந்தது.பிறகு யாருமே இந்த படத்தில் நடிக்க வரவில்லை என்று சொன்னவுடன் எனக்கு மனசுக்குள்ள பெரிய கஷ்டம் ஏற்பட்டது. அதற்குப் பிறகு தான் ஏன் நம்ப நடிக்கக் கூடாது, நான் நடித்த சொல்ல மறந்த கதை படம் நன்றாக ஓடியது. அதனால் சரி நாமே ஆட்டோகிராஃப் படத்தில் நடிக்கலாம் என்று முடிவு செய்தேன் என்று கூறினார்.

Advertisement