தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் சேரனும் ஒருவர். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். அந்த வகையில் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. வசூல் சாதனை பெற்றது என்றும் சொல்லலாம். இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடல் தேசிய விருது பெற்றது. சேரன் அவர்கள் இயக்கிய பல படங்களுக்காக தேசிய விருதுகளை வாங்கி உள்ளார்.
தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்த சேரன், ஹீரோவான பின்னர் சினிமாவில் மிகப்பெரிய சாறுக்களை கண்டார். பொக்கிஷம் படத்திற்கு பின்னர் சேரன், 6 வருடங்கள் இயக்குனர் சேரில் இருந்து கொஞ்சம் ஒய்வு எடுத்தார். அதன் பின்னரும் நடிகராக நடித்து வந்த சேரன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்குனராக அவதாரமெடுத்தார்.
இதையும் பாருங்க : ரம்யா பாண்டியன் குடும்பத்தில் இருந்து இவரும் நடிக்க போறாரா ? அதுவும் யார் தெரியுமா ?
ஆனால், சேரனால் இன்றைய தலைமுறையினர் ரசிக்கும்படியான படங்களை கொடுக்க முடியவில்லை. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சேரன் அவர்கள் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஹீரோவாக நடித்துஇருந்தார்.இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
இப்படி ஒரு நிலையில் ஆட்டோகிராப் படத்தில் கமலாவின் கணவராக நடித்தவருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ள சேரன், இவர் ஆட்டோகிராப் படத்தில் கமலாவின் கணவராக நடித்தவர். பெயர் அலெக்ஸ். திண்டுக்கல்லில் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளையும் செய்து தருவது இவர் தான். எனக்கு நல்ல நண்பரும் கூட. காலம் எப்படி மாற்றியிருக்கிறது. நல்ல உழைப்பாளி இன்று நல்ல நிலையில் இருக்கிறார் என்பதை கண்டு சந்தோஷமடைந்தேன்.