என்னுடைய இயக்கத்தில் அவர் பாடிய ஒரே பாடல். அதுவும் படத்தில் இடம்பெற முடியாமல் போனது – சேரன் உருக்கம்.

0
1122
cheran

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கொரோனா தொற்றில் இருந்து அவர் மீண்ட போதும் அவருக்கு ஏற்பட்ட உடல் நிலை கோளாறு காரணமாக நேற்று மதியம் 1.04 மணி அளவில் அவர் உயிரிழந்தாக மருத்துவ குழுவினர் அறிவித்து இருந்தனர். எஸ் பி பியின் மறைவிற்கு நாட்டின் பிரதமர் துவங்கி பாலிவுட், டோலிவுட் வரை இருக்கும் பல்வேறு பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். இப்படி ஒரு நிலையில் எஸ் பி பியின் மறைவு குறித்து ட்வீட் செய்துள்ளார் சேரன்.

அதில், நீ வாழ்வாய் இவ்வையகம் உள்ளவரை.. உன் உடலுக்குள் இருந்த ஆன்மா இனி குரலாய் இசையாய் எங்களுக்குள் உலாவிக்கொண்டே இருக்கும்.. நீ நிரந்தரமானவன் அழியவில்லை.. எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை…இன்றுபோல இவ்வளவு அருகில் நான் SPBயை பார்த்ததில்லை.. இன்று நான் பாடகனை பார்க்கவில்லை.. மெளனத்தின் சப்தம் கேட்டது.. வெற்றியும் களைப்பும் விரிந்து கிடந்தது முகத்தில்.. ஓய்வை விரும்பி ஏற்ற தடமும் இருந்தது.

- Advertisement -

பிரிவை நாம்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்தாலும் கொடுப்போம் நல்விடை..இளமை துள்ளும் குரல்.. குரல் வழியே காட்சிகள் இப்படி உருவாகலாம் என அனுமானித்து பாடும் திறமை… கேட்பவர் வயது 70ஆக இருந்தாலும் அவரை குமரனாக மாற்றும் மகிமை … அந்த காந்தர்வ குரலுக்கு சொந்தக்காரன்…. SPB… என்று பதிவிட்டுள்ளார் சேரன்.

மேலும், மற்றொரு ட்வீட்டில் ‘என்னுடைய இயக்கத்தில் அவர் பாடிய ஒரே பாடல்.. அதுவும் படத்தில் இடம்பெற முடியாமல் போனது.. அந்த மாபெரும் கலைஞனோடு தொடர்ந்து பயணிக்கும் வாய்ப்பும் இல்லாமல் வேறுதிசையில் எனது பயணம்.. இப்போது உணர்கிறேன் அந்த கலைஞனோடு பயணிக்காத இழப்பை..’ என்று பதிவிட்டு எஸ் பி பாடிய பாடலையும் பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement