கவின் லாஸ்லியா காதலித்தால் இவருக்கு என்ன.! தரக்குறைவாக நடக்கிறார் சேரன்.! விளாசும் முக்கிய பிரபலம்.!

0
2829
cheran-kavin

விஜய் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி குறித்து சாரு நிவேதிதா அவர்கள் தனியார் சமூகவலைத்தளங்களில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.இந்த பேட்டி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த போட்டியில் அவர் கூறியது, நான் 25 ஆண்டுகளுக்கு மேலாகவே இருக்கும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை எதையும் பார்ப்பதில்லை. அதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி வந்த இரண்டு சீசன்களையும் கூட நான் பார்க்கவில்லை. குறிப்பாக, தற்போது நடந்து கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியைக் கூட 60 நாட்களாக பார்க்காமல், தற்போது கடந்த சில இருபது நாட்களாக தான் ஹாட் ஸ்டார் மூலமாக பார்த்துக் கொண்டு வருகிறேன். இந்த நிகழ்ச்சியில் கலந்து இயக்குனராகவும், நடிகராகவும் இருந்த சேரன் போட்டியாளர் அவர்கள் மிகவும் சின்னப்புள்ளத்தனமாக நடந்து கொண்டு வருகிறார்.

Cheran

அதிலும் கவின்,லாஸ்லியா காதல் குறித்து அவருக்கு தலை உச்சிக்கு மேல் கோபம் எழுகிறது.அது ஏன் தான் புரியல ? இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள கவின், சாண்டி, தர்ஷன்,முகின் ஆகிய இளம் வயது போட்டியாளர்கள் மிகவும் கவனமாகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் போல யோசித்தும் விளையாடி வருகின்றனர். ஆனால் , சேரன், கஸ்தூரி, மோகன் வைத்தியா,வனிதா, ஆகிய வயதில் பெரியவர்களான போட்டியாளர்கள் சின்ன குழந்தை போல தங்களுடைய குணாதிசயங்களை மாற்றி நடந்து கொண்டு வந்துள்ளனர் என சாருநிவேதிதா அவர்களை தாறுமாறாக வெளுத்து வாங்கினார்.அதிலும் சில வாரங்களுக்கு முன்னால் நடந்த கிராமப்புற டாஸ்க் இல் சேரன் பண்ணையார் வேடத்தில் இருந்து நடந்துகொண்ட விஷயம் மிகவும் கண்டிக்க வேண்டியது என்று அவர் கூறினார். மேலும் லாஸ்லியா, கவின் காதலிப்பது அவ்வளவு பெரிய கொடூரமான விஷயமா? என்ன உலகத்தில் யாருமே செய்யாத விசயமா என்ன என்று சேரனைப் பற்றி வறுத்து எடுத்தார்.

இதையும் பாருங்க : நேற்றய தங்க முட்டை டாஸ்கில் வென்றது யார்.! இன்றய ப்ரோமோவில் சிக்கிய ஆதாரம் இதோ.!

- Advertisement -

அதே மாதிரி லாஸ்லியா அப்பாவும் ஃப்ரீஸ் டாஸ்கில் உள்ளே வந்து லாஸ்லியாவிடம் ரொம்ப கடுமையாக அவரை திட்டியும், கோபமாக நடந்து கொண்ட விதமும் அவசியமற்றது என்றும் கூறினார். இந்த உலகில் யாரும் பண்ணாத தவறை லாஸ்லியா ஒன்றும் செய்யவில்லை. அவரை குற்றவாளியாக காமிப்பது ரொம்ப தவறானது, அதுதான் மன்னிக்க முடியாத செயல் என்று கூறினார். அதுவும் லாஸ்லியா அப்பா, டிவியில் ஒளிபரப்பாகும் என்று தெரிந்தும் வந்து அவரை திட்டியது வேணும்னே செஞ்சது போல தான் இருக்குது.அதிலும் வனிதா அவர்கள் இங்கு வந்த 16 போட்டியாளர்களில் தான் தான் திறமையானவர் என்றும், தன்னை விட புத்திசாலி யாரும் இல்லை என்பது போலவே நடந்து கொண்டார். அவருக்கு முன்னால் வேறு யாரும் பேச்சு திறமைகளை காட்ட முடியவில்லை. அந்த அளவிற்கு அவர் பேசியும் மற்றவர்களை டாமினேட் செய்தும் வந்துள்ளார். இதனாலேயே அவர் சீக்கிரமாகவே வெளியேற்றப்பட்டார்.

Image result for cheran in bigg Boss

மோகன் வைத்தியா என்னவோ அவருக்கு 24, 25 வயசுதான் ஆகுற மாதிரி துணிகளை போட்டு கொண்டும், ஹேர் ஸ்டைலை மாற்றிக் கொண்டும் கிண்டல் கேலி செய்து கொண்டு வந்தார்.இப்படி எல்லாம் செய்தால் சீக்கிரம் வெளியே போக வேண்டாம் என்று நினைத்தாரோ என்று தெரியல.இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பெரியவர்கள் எல்லாம் சின்ன புள்ள தனமாகவும் ,சிறியவர்கள் எல்லாம் அனுபவம் வாய்ந்தவர்களாகவும் நடந்து கொண்டு வருகின்றனர். பிக்பாஸ் வீட்ல என்ன நடக்குதுனு புரியாத அளவுக்கு நடந்து கொண்டு வருகிறது என்று கூறினார். மேலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி சென்றுள்ளதை தொடர்ந்து இந்த பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆக போவது சாண்டி அல்லது தர்ஷன் ஆகிய இருவரில் ஒருவராக தான் இருக்கக் கூடும் என்றும் அவர் கூறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.