சேரனுக்கு ஆறுதலாக ட்வீட் போட்ட விவேக்..விவேக்கையும் விட்டு வைக்காத கவிலியா ஆர்மி..

0
7658
vivek-cheran
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு காதல் கதைகள் உருவாக்கினாலும் கடந்த சில வாரத்திற்கு முன்னால் நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் ரசிகர்களின் ஆதரவை பெற்ற ஜோடிகளாக திகழ்ந்து வந்தவர்கள்தான் கவின் மற்றும் லாஸ்லியா. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இவர்கள் இருவருக்கும் நடந்த ரொமான்ஸ் தான் இந்த சீசனின் ஹைலைட்டாக கருதப்பட்டது. கவின் மற்றும் லாஸ்லியாவின் உறவிற்கு ரசிகர்களின் பேராதரவு இருந்து வந்தது. ஆனால், இவர்களின் காதலுக்கு அவர்களின் பெற்றோர்களை விட சேரனை தான் மிகவும் எதிரியாக பார்த்து வருகின்றனர் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள்.

-விளம்பரம்-

இதனால் கடந்த சில நாட்களாகவே சேரனை கவின் ஆர்மி திட்டித் தீர்த்து வருகிறது. இதனால் கடுப்பான சேரன் இனி லாஸ்லியா மற்றும் கவின் பெயரைக்கூட நான் சொல்ல மாட்டேன் என்று ட்வீட் செய்திருந்தார். இந்த நிலையில் சேரன் இன்று சில வீடுகளை தட்டிவிட்டார். அதில், ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே.. சோஷியல் நெட்வொர்க் என்ற பெயரில் அத்துமீறி ஆபாச வார்த்தைகளால் விமர்சனம் செய்யும்நிலை வளர்ந்துவிட்டது.. சிலரின் மனதில் காட்டுப்பேயாய் குடியேறியிருக்கும் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

- Advertisement -

நடிகர்களின் இத்தனை வருட உழைப்பை மதிக்காமல் அவர்களின் முன்னேற்றத்தின் காரணம் அறியாமல் ரசிகர்கள், விமர்சகர் என்ற பெயரில் போலியானவர்கள் ஆபாச வார்த்தைகளால் சமூக வளைதளங்களில் பேசுவதை பதிவிடுவதை எதிர்க்கிறோம்… #CheranFansAgainstCyberBullying என்று பதிவிட்டிருந்தார். இதுவும் கவனைத்தான் குறிப்பிடுகிறது என்று எண்ணிய கவிலியா ரசிகர்கள் சேரனை வறுத்தெடுக்க தொடங்கினார்கள்.

இந்த நிலையில் சேரன் கோட்டட் வீட்டிற்கு ஆதரவாக பிரபல காமெடி நடிகர் விவேக்கும் ட்வீட் செய்திருந்தார். அதில், ஒரு ஆபாசத்துக்கு இன்னொரு ஆபாசம் பதில் என்றால் சமூகமே அழுகி,நாற்றம் அடிக்கும் குப்பைமேடு ஆகிவிடும். அமைதியாக அதை கட்ந்து சென்றால், அது மக்கி மண்ணாகி விடும். எப்போதும் உயர்ந்த நேர்மறை மற்றும் மாணவர் இளையோரை ஊக்குவிக்கும் பதிவுகளே இந்த சமுதாயதிற்கு நன்று. இதுவே என் கருத்து. சேரன் சார்! நீங்கள் மிக சிறந்த சமுதாய நோக்கம் உள்ள தேசிய விருது பெற்ற படைப்பாளி. ஆகவே விஜய் சொல்வது போல் “ ignore negativity”. அஜீத் சொல்வது போல் “ let go”. நல்ல கருத்தினை பதிவிட்டு அமைதி, ஆனந்தமுடன் இருங்கள். Peace to all என்று பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

விவேக்கின் இந்த டீவீட்டிற்கு நன்றி தெரிவித்த சேரன், மகிழ்ச்சி சார் இது பொதுமக்களுக்கான பதிவும்கூட.. நிறைய பெண்களோட பக்கங்கள்ல ஆபாசவார்த்தைகள், படங்கள்னு பதிவிடுற பழக்கம் உள்ளவங்களுக்கு.. அவங்க வீட்டிலும் பெண்கள் இருக்காங்கன்னு சொல்றதுக்கு.. நம்ம கார்ல போயிர்றோம் சார்.. இன்னும் சைக்கிள், பைக் மற்றும் நடந்துபோற மக்கள் இருக்காங்களே. என்று பதிவிட்டுள்ளார். ஆனால், சேரனுக்கு ஆதரவாக விவேக் ட்வீட் போட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாத கவிலியா ரசிகர்கள் சேரனைப் பற்றி விவேக்கிடம் புலம்பி வருகிறார்கள். விவேக் மட்டுமல்ல, சேரனுக்கு ஆதரவாக பல்வேறு நடிகர்கள், மற்றும் சினிமா பிரபலங்கள் என்று பலரும் ட்வீட் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement