என் அம்மா மற்றும் அக்காவுடன் – பல ஆண்டு கழித்து சொந்த ஊர் சென்ற சேரன். அழகிய தருணத்தின் புகைப்படம்.

0
3259
cheran
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் சேரனும் ஒருவர். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். அந்த வகையில் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. வசூல் சாதனை பெற்றது என்றும் சொல்லலாம்.இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடல் தேசிய விருது பெற்றது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-88-494x1024.jpg

சேரன் அவர்கள் இயக்கிய பல படங்களுக்காக தேசிய விருதுகளை வாங்கி உள்ளார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். சேரன் படங்கள் என்றால் அதில் நிச்சயம் சைக்கிள் இடம்பெற்று விடும். பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை இவரை சைக்கிளை பலரும் காலாய்த்தார்கள்.

இதையும் பாருங்க : இளையராஜா, யுவன் யாருக்கும் இது பத்தி தெரியாது – கணவரை பிரிந்த பாவம் கணேஷா சீரியல் நடிகை.

- Advertisement -

அவ்வளவு ஏன் பிக் பாஸ் 3 கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கூட சாண்டி சைக்கிளை வைத்து தான் சேரனை கலாய்த்து இருப்பார். இதுகுறித்து கடந்த சில தினங்களுக்கு முன் பதிவிட்ட சேரன், தினமும் 9 + 9 கிலோ மீட்டர் சைக்கிள் ஒட்டி போய்தான் +2 படிச்சேன். அந்த பயணத்தில் இருக்கற கதைகள் வேற, 4வது கிலோ மீட்டர்ல ஒரு ஊனமுற்ற மாணவர் தினமும் என் சைக்கிள்ல தான் பிக்கப் டிராப் என்று கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் நீண்ட வருடங்களுக்கு பின் தன் சொந்த ஊருக்கு சென்று உள்ளார் சேரன், இதுவரை விளக்குகள் இல்லாமல் இரவு நேரங்களில் தனியே செல்வதற்கு சற்று பயமாக இருக்கும் சாலை தான் எங்களுக்கு… இப்போது வழிமுழுவதும் விளக்குக்கம்பங்கள் வந்துவிட்டது. அதன் காரணம் எங்கள் ஊர் பிரசிடெண்ட் தம்பி மு.இளையராஜாவின் முயற்சி என்று பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் சேரன் தனது அம்மா மற்றும் அக்காவுடன் சொந்த ஊருக்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று உள்ளார்.

-விளம்பரம்-
Image

அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள சேரன், அம்மா கூட கோவிலுக்கு போவதில் ஒரு அலாதி சுகம் உண்டு… சிறுவயதில் அம்மாவின் கைபிடித்து அழகர்கோவில் சென்ற நான் இன்று என் கைகளை பற்றிக்கொண்டு அதே இடங்களில் அவர் நடந்தபோது என் மனதில் ஏற்பட்ட சந்தோசம் … எல்லா மகன்களும் இதை அனுபவிக்க வேண்டும்.. அருகில் இருப்பவர் எங்க அக்கா..என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement