இளையராஜா, யுவன் யாருக்கும் இது பத்தி தெரியாது – கணவரை பிரிந்த பாவம் கணேஷா சீரியல் நடிகை.

0
55779
paavam
- Advertisement -

கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்ததாக பாவம் கணேசன் சீரியல் நடிகை கூறியுள்ளார். விஜய் தொலைக்காட்சிகளில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அதிலும் ராஜா ராணி, ஈரமான ரோஜாவே, சின்னத் தம்பி என்று சினிமா பட பாணியில் டைட்டில்களை வைத்து வெளியான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி போன்ற தொடர்கள் பார்ட் 1,2,3 என்று ஒளிபரப்பப்பட்டது. அந்த வரிசையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகம் கூட துவங்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

கொரோனா பிரச்சனை காரணமாக பல சீரியல் நிறுத்தப்பட்டது. இருப்பினும் அடுத்தடுத்து புதிய சீரியல்களை விஜய் டிவி துவங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதங்களுக்கு முன்னர் பாவம் கணேசன் என்ற புதிய தொடர் ஒளிபரப்பானது. kpy புகழ் நவீன் இந்த தொடரில் நாயகனாக அறிமுகமானார். இந்த தொடரின் நேகா கவுடா, அனில ஸ்ரீகுமார், ஷிமோனா ஜேம்ஸ், ஆனந்த் பாண்டி, ஷயமா ரெய்லடீன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதையும் பாருங்க : ஜான்சி ராணி முதல் வேலு நாச்சியார் வரை – பெண் கெட்டப்பில் அசத்தியுள்ள விஜய், ஆர்யா பட காமெடி நடிகர்.

- Advertisement -

இந்த தொடரில் சித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை விலாஷினி. இவர் இசைமைப்பாளர் இளையராஜாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள திருமண வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள கசப்பான அனுபவங்களையும் கணவர் தனக்கு செய்த கொடுமைகளையும் பற்றி கூறியிருக்கிறார் திருமண வாழ்க்கையை பொறுத்தவரை நான் ஏமாந்து விட்டேன் நான் எதிர்பார்த்த மாதிரி என்னுடைய கணவர் சபரி ஞானபிரகாஷ் இல்லை எனக்கு அவர் தொடர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார். எனக்கு மட்டும் இல்லாமல் என்னை சார்ந்தவரும் என் கணவர் தொல்லை கொடுத்து வருகிறார்.

இந்த விஷயம் எல்லாம் இளையராஜாவிற்கோ யுவன் ஷங்கர் ராஜாவிற்கோ தெரியாது. பல பேருடன் மோசடி வேலைகளில் அவர் ஈடுபட்டு இருக்கிறார். திருமணத்திற்கு முன்பு வரை இந்த விஷயம் எனக்கு தெரியாது திருமணத்திற்குப் பின்னர் தான் அவரைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் நான் கண்டுபிடித்தேன் என்னை அவர் அடித்து துன்புறுத்துகிறார் அது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்பதால் அவரிடம் இருந்து நான் ஒதுங்க முடிவு செய்துவிட்டேன் குடும்ப சண்டை கடந்து அவருக்கு பல பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது அதனால் தான் விவாகரத்து செய்யும் முடிவுக்கே வந்தேன் என்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவரை விட்டு விலகுவது தான் என்னுடைய வாழ்க்கைக்கு நல்லது தற்போது தனியாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது இதே நிம்மதியுடன் தொடர்ந்து வாழ்ந்தால் போதும் என்று கூறியுள்ளார் விலாசினி

-விளம்பரம்-
Advertisement