விஜய் சேதுபதிக்காக எழுதியுள்ள கதை என்னுடைய இந்த படம் மாதிரி தான் இருக்கும் – சேரன் அப்சட் பதிவு.

0
7788
cheranvijaysethpathi
- Advertisement -

சினிமா உலகில் நுழைந்த குறுகிய நாளிலேயே தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சும் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் விஜய் சேதுபதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து உள்ள படம் மாஸ்டர். இந்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன், காத்துவாக்குல ரெண்டு காதல், லாபம் போன்ற பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Vijay Sethupathi-Cheran's film to go on floors in January 2020 ...

- Advertisement -

அதோடு இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். இவரை வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் நடிகரும், இயக்குனரும் ஆன சேரன் அவர்கள் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க போவதாக ஏற்கனவே சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்.

இதையும் பாருங்க : அன்றே இந்த ஐடியா வந்தது எப்படி ? வேலைக்காரன் பட இயக்குனர் பேட்டி.

இந்நிலையில் சேரன் அவர்கள் விஜய் சேதுபதியை வைத்து இயக்கும் படம் குறித்து ஒரு டீவ்ட் போட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, தவமாய் தவமிருந்து போன்ற ஒரு படைப்பு மாதிரி தான் விஜய்சேதுபதி அவர்களுக்கு வைத்திருக்கும் படத்துக்கான திரைக்கதை. ஏனோ, செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போகிறது. அண்ணன்களும் , தங்கைகளும் கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கப்போகும் படமாக அமையும். வழி விடுமா காலம் என்று ஏக்கத்துடன் கூறி உள்ளார்.

-விளம்பரம்-

விஜய் சேதுபதியை வைத்து இயக்கும் படத்திற்கு சேரன் அவர்கள் தன்னுடைய முந்தய படமான தவமாய் தவமிருந்து படம் போல கதை இருக்கும் என்று கூறி உள்ளார். மேலும், சேரனின் ட்வீட் பார்த்து ரசிகர் ஒருவர் கூறியிருப்பது,மனிதனின் சராசரி ஆயுட்காலம் 56 ஆண்டுகள். ஆனால், வாழும் நேரங்கள் என்னவோ மிக குறைவுதான். அந்த மணிதுளிகளை மனது பத்திரமாக சேகரித்து கொள்ளும்.

இதையும் பாருங்க : கொரோனா பாதிப்பு, மோடிக்கு கடிதம் எழுதிய மாணவன். சூப்பர் ஐடியா என்று பாராட்டிய பாக்கியராஜ்

அப்படியான நேரங்கள் ஏதேனும் ஒன்றில், “தவமாய் தவமிருந்து” படம் உள்ளுறைந்திருக்கும். அத்தகைய ஆற்றல் கொண்டது அந்த ஆக்கம். நன்றி சார் என்று கூறி இருந்தார். தற்போது இந்த டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அந்த படம் தவமாய் தவமிருந்து 2 வாக இருக்குமோ என்று கேட்டு வருகிறார்கள்.

தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் சேரனும் ஒருவர். சேரன் அவர்கள் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் ஆட்டோகிராப், சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். சேரன் அவர்கள் பல படங்களுக்காக தேசிய விருதுகளை வாங்கி உள்ளார். சேரன் அவர்கள் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஹீரோவாக நடித்து உள்ளார். சமீபத்தில் தான் இந்த படம் வெளியாகி இருந்தது.

Advertisement