அன்றே இந்த ஐடியா வந்தது எப்படி ? வேலைக்காரன் பட இயக்குனர் பேட்டி.

0
7769
velaikaran
- Advertisement -

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பல்வேறு உலக நாடுகள் பாதிப்படைந்துள்ளது. உலகளவில் இந்த நோயால் கடந்த சில மணி நேரத்திற்க்கு முன்பாக வரை 12,02,546 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை உலகளவில் இந்த நோயினால் 64,732 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்த நோயினால் இந்தியாவில் 3,374 பேருக்கும் மேற்பட்டோர் பதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 77 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்த நோயை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகிறது.

-விளம்பரம்-

மேலும், இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி கடந்த ஏப்ரில் 3 வீடியோ மூலம் உரையாற்றினார். அப்போது, ஏப்ரல் 5ம் தேதி, அதாவது இன்று இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு , அகல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்றுமாறும், மொபைல் டார்ச் மூலம் கொரோனாவிற்கு எதிரான வெளிச்சத்தை காட்டுங்கள். உங்கள் வீட்டு வாசலில் இருந்தோ பால்கனியில் இருந்தவாறு இதை செய்யுங்கள்.

- Advertisement -

தெருவில் கூட்டமாக சேர வேண்டாம். வீட்டில் ஒளியேற்றும் போது சமூக விளைவுகளை கடைபிடியுங்கள். நாம் ஊரடங்கில் தான் இருக்கிறோமே தவிர, தனியாக இல்லை. ஒற்றுமையின் வலிமையை மக்கள் உணர வேண்டும் என்றும் கூறி இருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து இந்த நிலையில் பிரபல திரைப்பட இயக்குனர் ராஜா இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார். அதில்,  “ஆம்.. இந்தப் பிரச்சினையை வெல்ல ஒரு தேர்வுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் அது நமக்குக் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

ஆனால் நமக்கு மத்தியில் நேர்மறை எண்ணங்கள் இருப்பதே இப்போதைய உடனடி தேவை. அதைத்தான் பிரதமர் மோடி நம்மிடம் கோரிக்கையாக வைத்துள்ளார். ‘வேலைக்காரன்’ படத்தின் லைட் அடிக்கும் ஐடியாவை நினைவுகூர்ந்த அனைவருக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார். மோகன் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான வேலைக்காரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

இந்த படத்தின் இடையிலும் மற்றும் கிளைமேக்ஸ் காட்சியிலும் மக்களின் ஆதரவை தெரிந்தகொள்ள சிவகார்த்திகேயன் தனது பகுதி மக்கள் அனைவரையும் விளக்கணைக்க சொல்லி டார்ச் லைட்களை ஒளிரவிட சொல்லுவார். மேலும், இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தியேட்டரில் இருந்த ரசிகர்கள் அனைவருமே செல் போன் விளக்குகளை ஒளிரவிட்டனர். படத்தில் இடம்பெற்ற இந்த காட்சி தற்போது நிஜத்தில் இன்னும் சில மணி நேரத்தில் நடக்க இருக்கிறது.

Advertisement